Rajini: அந்த ரோல் பண்றதுக்கு சும்மாவே இருக்கலாம்.. ரஜினி குறித்து சந்தீப் கிஷன் சொன்ன விஷயம்
Rajini: சினிமாவில் வளரும் இளம் தலைமுறை நடிகர்களின் கனவாக இருப்பது நல்ல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதையும் தாண்டி சினிமாவில் சாதித்த மூத்த நடிகர்களான ரஜினி ,கமல், விஜய் , அஜித் இவர்களுடன் சேர்ந்து எப்படியாவது நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். சொல்லப்போனால் இதுதான் அவர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது.
சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் ஒரு சின்ன ஃபிரேமிலாவது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ரஜினிக்கு ஒரு படத்தில் வில்லனாக நடித்து விட்டால் அவர்தான் அடுத்து மாஸ் நடிகராக கொண்டாடப்படுகிறார். உதாரணமாக பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருப்பார். அதன் பிறகு அவருடைய கிராஃப் எங்கு சென்றது என அனைவருக்குமே தெரியும்.
இதையும் படிங்க: இயக்குநர் வீட்டில் நடந்த துக்கம்… பிரபலங்கள் இரங்கல்!
அப்படி ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். ரஜினியை ஒரு இடத்தில் வைத்து பார்த்து வருகிறேன். அவருக்கு வில்லனாக நானா எனும் போது வேண்டாம் என்றுதான் தோன்றும். அப்படி ஒரு மெமரி என் வாழ்க்கையில் வேண்டாம். ஜெயிலர் படத்தில் மகன் கதாபாத்திரம் இருக்கும்.
அது ஒரு வகையான வில்லத்தனம்தான். அந்த ரோல் கிடைத்தாலும் நடிக்கமாட்டேன் என்றுதான் சொல்வேன். அதற்கு ரஜினி இருக்கும் ஸ்பாட்டுக்கு சென்று ஓரமாக உட்கார்ந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றுதான் நினைப்பேன் என சந்தீப் கிஷன் கூறியிருக்கிறார். ராயன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார் சந்தீப் கிஷன்.
இதையும் படிங்க ஓடிடி-ல ரிலீஸ் பண்ணக்கூடாது!.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. அமரன் படத்துக்கு வந்த புது சிக்கல்..
சமீபகாலமாக டாக் ஆஃப் தி டவுனாகவும் இருக்கிறார். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவும் சந்தீப் கிஷன்தான். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.