இப்படி ஒரு ஃப்ளாஸ் பேக்கா?.. வாயை பிளக்க வைத்த சாந்தனு பட இசை விழா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகர்களாக இருந்தவர்களின் வாரிசுகள் ஏதோ ஒரு காரணத்தால் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தன் தந்தைகளின் புகழில் பாதி சதவீதத்தை கூட அவர்களால் எட்ட முடியவில்லை. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர் பாக்யராஜின் மகன் சாந்தனு.
80களில் பாக்யராஜ் எப்பேற்பட்ட நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி ஒரு புகழ்பெற்ற இயக்குனரும் கூட. ஆனால் அவர் மகனான நடிகர் சாந்தனுவால் இன்னும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது ‘ராவணகோட்டம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சாந்தனு.
அந்தப் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். படத்தை தயாரிப்பவர் திட்டக்குடி கண்ணன் ரவி என்பவர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி துபாயில் பெரிய தொழிலதிபராம். இவருக்கு இருக்கும் சொத்திற்கு தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் தயாரிக்கலாம் என்று ராவண கோட்டம் பிரஸ் மீட்டில் சாந்தனு கூறியிருந்தார்.
மேலும் ராவண கோட்டம் படத்தின் இசைவெளியீட்டு விழாவை தயாரிப்பாளர் துபாயில் தான் நடத்தினார். நேற்றைய தினம் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் படத்தின் பட்ஜெட்டை விட இசைவெளியீட்டு விழாவின் பட்ஜெட் அதிகமாம்.
இந்த தகவல் அறிந்த சில பேர் சாந்தனுவிற்காக ஏன் அந்த தயாரிப்பாளர் இந்த அளவுக்கு மெனக்கிடுகிறார் என்று கேள்விகளை எழுப்பினர். அதற்கு காரணமான ஃப்ளாஷ் பேக் ஒன்று நம் காதுக்கு எட்டியது. அதாவது திட்டக்குடி கண்ணன் ரவி காதலித்து திருமணம் செய்தவராம். ஆனால் அவர் காதலுக்கு அவர்கள் சமூகத்தில் எதிர்ப்பு இருந்திருக்கிறது. போலீஸில் தஞ்சம் அடைந்தும் காவல் துறையினரும் அந்த சமயம் அவர்கள் திருமணத்தை நடத்த முன்வர வில்லையாம்..
அப்போது பாக்யராஜ் மிகவும் உச்சத்தில் இருந்த சமயம். அதனால் பாக்யராஜின் ரசிகர்கள் சில பேர் நேராக பாக்யராஜிடம் சென்று விவரத்தை கூற பாக்யராஜ் சொன்னதின் பேரில் கண்ணன் ரவியின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : அந்த நடிகையை விட அதிக சம்பளம் வேணும்!.. எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!…
அதன் பிறகும் குடும்பத்திலிருந்து மீண்டும் எதிர்ப்பு வந்திருக்கிறது. வெறும் 1000 ரூபாயை வைத்துக் கொண்டு கண்ணன் ரவி துபாய்க்கு வந்தவர்தானாம். இப்போது மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்கிறார். அதனால் அந்த நன்றிக் கடனை தீர்ப்பதற்காகவே பாக்யராஜின் மகனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என எண்ணி இந்த நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறார் திட்டக்குடி கண்ணன் ரவி.