என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

லியோ படத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் குறித்த முக்கிய தகவல்கள் சமீபத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட தகவல்கள் வெளியான போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட போது பலரும் ஆச்சரியமாகி விட்டனர்.

ரொம்பவே காமெடியான கேரக்டர் தான் சாண்டி உடையது. டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாக இருந்து பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தனி அடையாளத்தினை பெற்றார். இதை தொடர்ந்து சினிமாவில் பிஸியாகி இருக்கிறார் சாண்டி.

இதையும் படிங்க: விக்ரம் தாண்டியாச்சி.. அடுத்து பொன்னியின் செல்வன்!. வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர்…

ஏற்கனவே ஹரோல்ட் தாஸ் வீடியோவிலேயே சாண்டி இருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், இவர் கொடுத்து இருக்கும் ஹிண்ட்டால் ரசிகர்கள் ஒருவேளை அர்ஜூன் தாஸ் போன்று ஒரு வேடத்தில் சாண்டி வில்லன் கேங்கில் இருக்கலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடன் பிரச்னையால் முடங்கிய அயலான்… படத்தின் கதையும் இணையத்தில் கசிந்ததா?

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it