நிறத்தைக் காட்டி ஒதுக்கப்பட்ட பிரபலம்! பின்னாளில் விஜய்க்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த அந்த நடிகர்
Actor Vijay: இன்றைய கோலிவுட்டில் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். வசூலில் வாரி இறைத்து வருகிறார். ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவிலேயே ஆச்சரியப்படும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் விஜய்.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து பல தடைகளை தாண்டி இன்று வருங்கால அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறார். தற்போது விஜய் தளபதி 68 படத்தில் நடித்து வந்தாலும் இந்தப் படத்திற்கு பிறகு அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: அரைகுறை உடையில் குளியல் போடும் தர்ஷா குப்தா!.. காஜி ஃபேன்ஸ் லைக்ஸ் சோ மச்!..
சினிமாவை பொறுத்தவரைக்கும் பல விமர்சனங்களை தாண்டி ஜெயித்தவர்கள் ஏராளம். ஏன் இன்றைய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி நிறத்தின் காரணமாக விமர்சனம் செய்யப்பட்டவர்தான். அதே போல் விஜயும் அவர் தோற்றத்தை வைத்து விமர்சிக்கப்பட்டவர்தான்.
அஜித்துக்கு ஆரம்பத்தில் தமிழ் சரியாக பேசத் தெரியாததால் பல கிண்டல்களுக்கு ஆளானவர். இப்படி இன்று ஜெயித்தவர்கள் பல தடைகளை கடந்து வந்தவர்தான். அந்த வகையில் இன்று பல முன்னணி ஹீரோக்களை ஆட வைத்துக் கொண்டிருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
இதையும் படிங்க: சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.
அவர் கலா மாஸ்டர் பள்ளியில் இருந்து வந்தவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கடைசியாக விஜய்க்கு வில்லனாக லியோ திரைப்படத்தில் மிரட்டினார். ஆரம்பத்தில் கலா மாஸ்டர் பள்ளியில் இருக்கும் போது என்ன ஆட வேண்டும் என கலா மாஸ்டர் சொல்லிவிட்டு போய்விடுவாராம்.
அதன் பிறகு அங்கு இருப்பவர் சாண்டி கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்தால் கடைசியில் நிற்க வைத்துவிடுவார்களாம். கலா மாஸ்டர் திரும்பி வந்து பார்க்கும் போது மீண்டும் சாண்டியை முன்னாடி வந்து நிற்க சொல்வாராம். அதற்கு காரணம் சாண்டியிடம் இருந்த திறமை மட்டும்தான் என்று கலா மாஸ்டர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: மாஸ்டர் பீஸா?.. மரண மொக்கையா?.. பிரபாஸின் சலார் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!