Connect with us
sandy

Cinema News

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி – மாப்பிள்ளை யார் தெரியுமா?

Sandy Master: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி. கலா மாஸ்டர் பள்ளியிலிருந்து வந்தவர். மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான சாண்டி தன்னை மேலும் பிரபலமாக்க பிக்பாஸில் தன் முகத்தை காட்டினார்.

குரு நாதா குரு நாதா என பிக்பாஸை செல்லமாக அழைத்ததன் மூலம் மக்கள் மத்தியில் எளிதாக ரீச் ஆனார். அதன் மூலம் கிடைத்த வரவேற்புதான் அடுத்தடுத்து படங்களில் டான்ஸ் மாஸ்டராக உந்து கோலாக இருந்தது. நடன இயக்குனராக மட்டுமில்லாமல் இப்போது படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

இதையும் படிங்க: படம் முடியர வரைக்கும் கல்யாணம் பண்ணக்கூடாது!.. நயனுக்கே கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்…

லியோ படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுதான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

sandy

sandy

இவருடைய முதல் மனைவி காஜல் பசுபதி. வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தில் செவிலியராக நடித்திருப்பார். அதுதான் அவருடைய முதல் படம். இவரும் சாண்டியும் காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

இதையும் படிங்க: compromise ஆகாத ஆளு! இந்த படமே வேணானு சொன்ன தேவா – அஜித் படத்தில் ஏற்பட்ட சலசலப்பு

சாண்டி மீது இருந்த அதிகமான அன்பு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை பிரச்சினை வந்ததாம். அதன்பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். எனினும் சிங்கிளாக வாழ்ந்து வந்த காஜல் சாண்டி பிரிவிற்கு பின்பும் சாண்டியிடம் தோழியாக பழகி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காஜல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் என் திருமண செய்தியை அறிந்து அனைவரும் மகிழ்ச்சியடைவீர்கள் என்றும் திடீரென நடந்த திருமணம் என்பதால் யாருக்கும் சொல்ல முடியவில்லை. அதனால் சாரி என்றும் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : எங்களை கொச்சைப்படுத்திட்டாரு!.. மன்சூர் அலி கான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.. புது பிரச்சனை!

google news
Continue Reading

More in Cinema News

To Top