‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலங்கள்!.. விஜய் பட நடிகையை இறக்க பேச்சுவார்த்தை..
பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களை இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவற்றையெல்லாம் முன்பு நாம் கொண்டாட இருந்தது சுந்தர் .சியின் படமான ‘சங்கமித்ரா’ படம் தான். பெரும் பொருட்செலவில்
தயாரான சங்கமித்ரா படம் ஏதோ ஒரு வித காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
அந்தப் படமும் ஏஆர்.ரகுமான் இசையில் தான் தயாரானது. மேலும் அந்தப் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா,சுருதிஹாசன் என பல முன்னனி நடிகர்கள் முதலில் கமிட் ஆகியிருந்தார்கள். படத்திற்கான போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பொருளாதார காரணங்களால் தடைபட்டிருந்த சங்கமித்ரா திரைப்படத்தை மீண்டும் சுந்தர் சி கையில் எடுத்திருக்கிறார். ஏற்கெனவே லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து மாபெரும் வெற்றிப் பெற்றதை அடுத்து வரலாற்று படங்களை தயாரிப்பதில் லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் சங்கமித்ரா படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க போகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தில் ஜெயம் ரவி விலகிவிட்டார். பொன்னியின் செல்வனில் ஏற்கெனவே அரசர் கதாபாத்திரத்தில் நீண்ட ஆண்டுகளாக நடித்திருந்ததால் போதும் என நிறுத்திக் கொண்டாராம்.
அதனால் அவருக்கு பதில் நடிகர் விஷால் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் விஷால் சம்பளம் அதிகம் கேட்டதால் அவரும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறது. மேலும் சுருதி ஹாசனும் படத்தில் இருந்து
விலகியிருக்கிறார்.
அவருக்கு பதிலாக நடிகை பூஜா ஹெக்டேவை படக்குழு அணுகியிருக்கிறதாம். ஆனால் அவர் சம்பளமாக 4 கோடி கேட்டிருக்கிறாராம். இருந்தாலும் அவர் கேட்ட சம்பளத்தை தர முன்வந்ததால் பூஜா ஹெக்டே சங்கமித்ரா படத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.