180 கோடி பட்ஜெட்!.. டேக் ஆப் ஆகும் சங்கமித்ரா!.. யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?..

by சிவா |
sangamithra
X

சுந்தர்.சி இயக்கத்தில் சரித்திர படமாக உருவாகவிருந்தது சங்கமித்ரா. சில வருடங்களுக்கு முன் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியானது. ஆர்யா, ஜெயம்ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வேகவேகமாக வேலைகள் நடந்தது. இப்படத்திற்காக வாள் சண்டை பயிற்சியெல்லாம் ஸ்ருதிஹாசன் எடுத்தார். ஆனால், இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார். அவருக்கு பதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் இப்படம் டேக் ஆக் ஆகவில்லை.

அதன்பின் சுந்தர்.சி வழக்கம்போல் தனது டிரேட் மார்க் காமெடி படங்களை எடுத்து வந்தார். அப்போதுதான் பாகுபலி, பாகுபலி, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

sangamithra

எனவே, இப்போது மீண்டும் சங்கமித்ரா பிராஜெக்ட் டேப் ஆகியுள்ளது. இதில், ஜெயம் ரவி,தீபிகா படுகோனே நடிக்கவில்லை. அதேநேரம், ஜெயம் ரவிக்கு பதில் மலையாள நடிகர் பிருத்திவிராஜ் நடிக்கவுள்ளாராம், சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளாராம். அதேநேரம், படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க போகும் நடிகை யார் என்பது தெரியவில்லை.

விரைவில், இப்படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரகாஷ்ராஜுடன் வாழ்ந்த 16 வருட வாழ்க்கை!.. மனம் திறக்கும் லலிதா குமாரி..

Next Story