சுந்தர்.சியை வச்சு செய்யக் காத்திருக்கும் நடிகர்கள்.. ‘சங்கமித்ரா’ சந்திக்கப்போகும் பிரச்சினை...
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக சுந்தர்.சியின் சங்கமித்ரா படம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் ஏதோ ஒரு வித காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
அந்த சமயத்தில் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க போவதாக செய்திகள் பரவியது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் வெளிவர இருப்பதாகவும் கூறப்பட்டது. சமீபகாலமாக வரலாற்று கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த் ஆர்வம் இருப்பதால் மீண்டும் சங்கமித்ரா படம் புத்துயிர் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : லண்டனில் குமுற குமுற குத்து வாங்கிய விக்னேஷ்சிவன்!.. காண்டாகிய லைக்கா நிறுவனம்.. ஏகே-62 கைமாறியது எப்படி?..
இந்த படத்தை துவக்கும் முயற்சியில் சுந்தர் சி இறங்கியிருக்கிறார். ஆனால் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க போவதாக தெரிகிறது. ஏற்கெனவே பொன்னியின் செல்வனின் வெற்றி இந்த படத்தின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா , ஸ்ருதிஹாசன், ஹிந்தி நடிகை திஷா பதானி உட்பட பலரும் நடிக்கின்ற சங்கமித்ரா படத்தில் திடீரென ஜெயம் ரவி விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக நடிகர் விஷால் நடிப்பதாக சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஏற்கெனவே விஷாலும் ஆர்யாவும் நல்ல நண்பர்கள் என்பதையும் தாண்டி இருவரும் சேர்ந்து அவன் இவன், எனிமி போன்ற படங்களில் நடித்திருக்கின்றனர். மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர். இதில் என்ன பிரச்சினை என்னவென்றால் விஷாலின் கால்ஷீட் தான் பிரச்சினை. படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார்.
இதற்கு முன் லத்தி படத்தின் அந்த மாதிரியான பிரச்சினைகள் நிலவியது. அதே போல் இந்தப் படத்திலும் நடந்தால் படத்தின் தரமே போய்விடும். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து தன்னுடைய முழு ஈடுபாட்டை காண்பிப்பார் என்று தெரிகிறது.