Connect with us

என்னால விஜய் திட்டு வாங்குனாரு…. மனம் திறந்த பிரபல நடிகை….!

vijay

Cinema News

என்னால விஜய் திட்டு வாங்குனாரு…. மனம் திறந்த பிரபல நடிகை….!

மாஸ் நடிகராக வலம் வரும் நடிகர் விஜயை பிடிக்காத நபர்களே கிடையாது. இவருடன் பணியாற்றிய அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளும் விஜய் குறித்து ஏதேனும் ஒரு நல்ல பண்பை கூறுவார்கள். மிகவும் எளிமையான மனிதர், தன்னடக்கம் உள்ளவர் என பல நற்பண்புகள் அவரிடம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய பிரபல நடிகை ஒருவர் அவருடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல ஒரு சமயத்தில் விஜய் காதலிப்பதாக கூறப்பட்ட நடிகை சங்கவி தான்.

sangavi

இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சங்கவி கூறியதாவது, “விஜய் எப்போதுமே அமைதியான மனிதர். அவர் தனிமையில்தான் அதிக நேரம் செலவிடுவார். விஜய் தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது கடின உழைப்பு தான்.

ஒருமுறை விஷ்ணு படத்திற்காக மூணாறு சென்றிருந்தோம். அங்கு தண்ணீர் செம ஜில்லுனு இருந்தது. அப்போ படத்தோட இயக்குனர் எஸ்ஏசி சார் திட்டுவாருன்னு பயந்துட்டு நான் தண்ணீல இறங்கிட்டேன். ஆனா விஜய் ரொம்ப ஜில்லுனு இருக்குனு தயங்கி நின்னுட்டு இருந்தாரு.

vijay

என்னதான் எஸ்ஏசி சார் விஜயோட அப்பாவா இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் ரொம்ப ஸ்ரிக்ட். அதனால கோபப்பட்ட எஸ்ஏசி சார், “அந்த பொண்ணே இறங்கிடுச்சு உனக்கு என்ன” அப்படினு சொல்லி விஜய திட்டுனாங்க. என்னால அவரு திட்டு வாங்கிட்டாருனு நினைச்ச ரொம்ப கஷ்டமா இருந்தது” என விஜய் உடனான தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை நடிகை சங்கவி பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top