சங்கீதாவுக்கு பிடிக்காத விஷயத்தினை தொடர்ந்து செய்யும் விஜய்..! குடும்பத்தில் வெடித்த பிரளயம்..!
Vijay: விஜயும் அவர் மனைவி சங்கீதாவுக்கு கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருப்பது சூசகமாக பலருக்கும் கசிந்த தகவலாக தான் இருக்கிறது. இந்த விஷயத்தினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு செய்தியும் தற்போது தீயாக பரவி வருகிறது.
ரஜினியை போல தன்னுடைய ரசிகையை விரும்பி திருமணம் செய்து கொண்டவர் நடிகர் விஜய். இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருப்பது போல தான் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் வலம் வந்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் தற்போது உறவு சுமூகமாக இல்லையாம்.
இதையும் படிங்க: ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? நிக்ஷனை பார்த்து பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தமா?
அதனால் தான் வாரிசு, லியோ விழாக்களில் சங்கீதா கலந்து கொள்ளவில்லையாம். பொதுவாக விஜயின் பட விழாக்களில் விஜயுடன் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவர். கடைசியாக மாஸ்டர் ஆடியோ ரிலீஸில் கலந்து கொண்டு இருந்தார் சங்கீதா. அப்போது இருவரும் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி வைரலானது.
ஆனால் அதனை தொடர்ந்து சங்கீதா பொது மேடையில் தோன்றவே இல்லை. முதலில் அவர் பசங்க படிப்புக்காக வெளிநாட்டில் இருக்காங்க எனக் கூறிப்பட்டது. ஆனால் ஜேசன் சென்னைக்கு வந்து லைகா நிறுவனத்தில் கையெழுத்து போட்ட போது கூட அவர் காணப்படவே இல்லை.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா!.. மறுபடியும் வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்!.. இவ்ளோ சீப்பான ஆளா அவர்?..
த்ரிஷாவுடன் விஜய் பேசக்கூடாது என கண்டிஷன் போட்டு பார்த்து அவர் கேட்பதாக இல்லையாம். இந்த வெற்றிவிழாவில் த்ரிஷாவும் கலந்து கொள்வார். அதை சங்கீதா விரும்பாமல் தான் கலந்துக்கொள்ளவில்லை என பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.