Sanjana natarajan: மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் சஞ்சனா நடராஜன். சுதா கொங்கரா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். சென்னையில் பிறந்து வளர்ந்த சஞ்சனா கல்லூரி படிப்புக்குப்பின் விஸ்வல் கம்யூனிக்கேஷன் படித்தார். அப்படியே மாடலிங் துறையில் அதிக ஆர்வமும் ஏற்பட்டது.
சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். நெருங்கி வா முத்தமிடாதே என்கிற படம் மூலம் அறிமுகமானார். இதில் சின்ன வேடம்தான். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகாவின் அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்பின் நோட்டா, 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். டிவியில் கனா கானும் காலங்கள், கல்லூரி சாலி ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும், As i am suffering from kadhal மற்றும் கையும் களவும் ஆகிய வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார்.
சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரமோ, பெரிய கதாபாத்திரமோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இநிந்லையில், சமீபத்தில் ஜாலியாக சுற்றுலா சென்ற சஞ்சனா கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அவர் எந்த எண்ணத்தில் வெளியிட்டாரோ ஆனால் காஜி ரசிகர்களுக்கு அந்த புகைப்படங்கள் விருந்தாக அமைந்திருக்கிறது.