ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்த ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததாலோ என்னவோ அதன்பின் திரைப்படங்களிலும் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.
அதன்பின் ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொலிலாளி வேடம்தான். ஆனாலும், சந்தோஷமாக கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இவரின் சொந்த தேசம் ஆந்திரா. எனவே தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். சாகசங்களில் ஈடுபாடு உள்ள சஞ்சனா சிங் இது தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கலக்கினார். சினிமாவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என புரிந்து கொண்ட அவர் சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.
அதோடு, உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்க விரும்பும் அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அழகை வளைத்து வளைத்து காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…