‘ஜவான்’ படத்தில் வில்லனாக களமிறங்கும் ‘லியோ’ பட நடிகர்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அட்லீ..
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அட்லீ. தமிழில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அதன் பின் தொடர்ந்து விஜயை வைத்து தனது சிம்மாசனத்தை உருவாக்கினார்.
விஜயை வைத்து தொடர்ந்து இயக்கிய மூன்று படங்களும் வசூல் ரீதியிலும் சரி விமர்சனம் ரீதியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட விஜய்க்கு ஏற்ற இயக்குனர் அட்லீ தான் என்றும் திரையுலகினர் பேச ஆரம்பித்தனர்.
அந்த அளவுக்கு அவர்களுக்கு இடையே நெருக்கமும் அதிகரித்தது. இந்த நிலையில் அட்லீ தற்போது பாலிவுட்டிலும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள ஷாரூக்கானை அணுகியிருக்கிறார். அவரை வைத்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஷாரூக்கானுடன் நயன் தாரா, தீபிகா படுகோனே, யோகிபாபு போன்ற முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் எப்பொழுது வெளியாகும் என்று ஹிந்தி ரசிகர்கள் உட்பட தமிழ் ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ஜவான் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்து ஷாரூக்கானும் விஜயும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. அதுவும் போக அல்லு அர்ஜூனிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் விஜய் , அல்லு அர்ஜூன் யாரும் அந்தப் படத்தில் நடிக்க போவதில்லை. பாலிவுட்டில் நடிகரும் அனைவரும் தேடப்படும் நடிகராக மாறியிருக்கும் சஞ்சய் தத் தான் ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடிக்க போகிறாராம். அதுமட்டுமில்லாமல் ஜவான் படத்தின் படப்பிடிப்பிலும் சஞ்சய் தத் இணைந்து விட்டதாக தகவலும் வெளியானது.
இதையும் படிங்க : மீண்டும் மீண்டுமா!. கடுப்பான ராமராஜன்.. கரகாட்டக்காரன் கிளைமேக்ஸில் நடந்தது இதுதான்!..