விஜய் பார்ப்பாரா....பிக்பாஸ் வீட்டில் சஞ்சீவ் வெங்கட்

by ராம் சுதன் |   ( Updated:2021-11-25 04:42:33  )
sanjeev venkat
X

கொரோனாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் குணமாக ரஜினி, விஜய், மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தார்கள், அது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய சினிமா துறையினரும் கமல்ஹாசன் குணமாக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட் ரோல் ஆக சஞ்சீவ் வெங்கட் உள்ளே வருகிறார். அவர் திருமதி செல்வம் என்ற நாடகத்தில் பிரபலமாகி தளபதி விஜய் உடன் நடித்து அவருடன் நீங்கா நட்பைப் பெற்றவர்.

இவர் தற்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ வில் கெஸ்ட் ரோலாக உள்ளே நுழைகிறார், அவர் உள்ளே வரும் பொழுதே அவரை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள் பிக்பாஸ் குடும்பத்தினர். உள்ளே வந்தவுடன் பிரியங்கா கட்டி அணைத்து வெழ்கம் செய்தார் மற்றும் சிபியு இமான் அண்ணாச்சி ஆகியோரும் வரவேற்றார்கள்.

sanjeev venkat

sanjeev venkat

அப்பொழுது ராஜு, சஞ்சீவ் வெங்கட்டிடம் "ரியாக்ட் செய்யக்கூடாது"‌‌ என்ற விளையாட்டு இருக்கிறது, அதற்கு நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டார், அப்பொழுது சஞ்சீவ் உத்வேகத்துடன், ஆரவாரத்துடனும் "எப்போ நாம விளையாட போறோம்" என்று கேட்டார், அதற்கு பிக்பாஸ் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்துடன் கத்தி ஆட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது சஞ்சீவ், "அண்ணாச்சிசிசிசி" என்று கத்தினார்.‌ "அண்ணாச்சி வந்தா தான் நான் உள்ள வருவேன்" என்று சஞ்சீவ் மத்தவங்ககிட்ட சொன்னார். உடனே குடும்பத்தினர் அனைவரும் இமான் அண்ணாச்சியை அழைத்து வந்தார்கள், சஞ்ஞிவ் அண்ணாச்சியிடம், "நீங்க இதுவரை செம்மையா விளையாடி நீங்க, இனிமேலும் சூப்பரா விளையாடுங்க" என்று வாழ்த்துக் கூறினார்.

சஞ்சீவ் வெங்கட் கிளம்பும் நேரத்தில் சிபி "இத விஜய் சார் பார்ப்பாரா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார், அதற்கு‌ சஞ்சீவ் நக்கலாக சிரிச்சிட்டு சிபிஐ பார்த்தார், இத கேட்ட பிக்பாஸ் மெம்பர்ஸ் அனைவரும்‌‌ குதூகலத்தில் கத்த ஆரம்பித்தார்கள்.

இது இனிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது.

Next Story