More
Categories: Cinema History Cinema News latest news

வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்

வாலிபக் கவிஞர், காவியக் கவிஞர் என்ற புனைப்பெயர்களோடு தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தவர் கவிஞர் வாலி. திரைப்படப் பாடல்களையும் தாண்டி தமிழ் இலக்கியத்திலும் பெரும் வல்லவராகத் திகழ்ந்தார். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் கண்ணதாசன்.

கண்ணதாசன் சினிமாவை ஆட் கொண்டிருந்த போதே வாலி தன் முயற்சியை முன்னெடுத்தார். ஒரு பக்கம் கண்ணதாசன் ஒரு பக்கம் வாலி என போட்டிகளில் தமிழ் சினிமா பயணப்பட்டது. தொழில் முறையில் இவர்களுக்கு இடையில் போட்டிகள் இருந்தாலும் திரைக்கு பின்னாடி  நட்பை இவர்கள் கொண்டாடி வந்தார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க : அந்த இடத்தை பார்த்தா தலையே சுத்துது.. மறைக்காம மாட்டி மனச கெடுக்கும் யாஷிகா….

எம்ஜிஆர், சிவாஜி இவர்களையும் தாண்டி சிம்பு வரைக்கும் வாலியின் கவிதை ரசிக்கப்பட்டது. அதனாலேயே வாலிபக் கவிஞர் என்ற பெயருக்கு சொந்தமானார். இந்த நிலையில் வாலி முன்பு ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கரை பற்றிய எதிர்பார்க்காத தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

ஷங்கர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ஜென்டில்மேன். இந்தப் படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி , செந்தில் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மானை பொறுத்தவரைக்கும் வளர்ந்து வரும் இசையமைப்பாளராகத்தான் இருந்தார்.

அந்தப் படத்தில்  ‘சிக்குபுக்கு ரயிலே’ என்ற பாடல் வரிகளை கொடுத்தவர் கவிஞர் வாலிதான்.மற்ற பாடல்களுக்கெல்லாம் வரிகளை எழுதியவர் வைரமுத்து. இந்த சிக்கு புக்கு ரயிலே பாடலை கொடுத்ததும் அதை படித்துப் பார்த்த ஷங்கர் ‘இதென்ன சிக்கு புக்கு ரயிலேனு இருக்கு? கொஞ்சம் மாற்றக் கூடாதா?’ என கேட்டாராம்.

அதற்கு வாலி ‘ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஒரு போர்ட்டர் பாடுவது மாதிரியான பாடல்தானே. இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும்’ எனக் கூறினாராம். இருந்தாலும் ஷங்கர் பல்லவியை கொஞ்சம் மாற்றி எழுதிக் கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்றாராம். வாலியும் பல்லவியை மாற்றி எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரஜினி கமல் ஜெயிக்கிறதுக்கு இதுதான் காரணம்!. நான்தான் கோட்டை விட்டேன்!. காலம்போன காலத்தில் புலம்பும் சத்தியராஜ்!…

அதன்பின் அந்தப் படத்திற்கான பூஜை விழாவின் சமயத்தில் இந்த சிக்கு புக்கு ரயில் பாடல் வரிதான் ஒலித்துக் கொண்டிருந்ததாம். அந்தளவுக்கு இந்த பாடலை அனைவரும் ரசித்திருக்கிறார்கள். இதை குறிப்பிட்டு பேசிய வாலி ‘கொடுத்த வரி நல்லா இல்லைனு பல்லவியை மாற்ற சொன்னான்ல, இனிமே உன் படத்துக்கு நான் பாட்டே எழுத மாட்டேன்’ என்ற முடிவெடுத்து அந்தப் படத்தில் இருந்து விலகினாராம்.

இல்லையென்றால் அந்தப் படத்திற்கான அனைத்து பாடல்களையும் வாலிதான் எழுத வேண்டியிருந்ததாம். அதுமட்டுமில்லாமல் வாலி என்ற பெயருக்கு ஏற்ப தனக்கு குரங்கு புத்தியும் அவ்வப்போது வரும் என்று தன்னைப் பற்றியும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் வாலி.

Published by
Rohini

Recent Posts