கோலிவுட் சினிமாவில் இசைகளுக்கெல்லாம் அரசன் என அழைக்கும் அளவிற்கு ஆயிரம் திரைப்படங்களுக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த பெரும் இசையமைப்பாளராக இளையராஜா இருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்தாலே அந்த படம் ஹிட் அடித்து விடும் என்கிற பேச்சு இருந்தது. இளையராஜாவின் இசைக்காகவே படத்தை பார்க்க ஒரு கூட்டம் இருந்தது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் ஒவ்வொரு படங்களுக்கும் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் இளையராஜா.
இளையராஜா சினிமாவிற்கு அறிமுகமான அதே காலகட்டத்தில்தான் ரஜினி கமல் இருவரும் அறிமுகநிலை கதாநாயகர்களாக இருந்தனர். இவர்கள் அனைவருமே அப்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே பணிபுரிந்திருந்தனர்.
1975 காலகட்டங்களில் நடிகர் சந்தான பாரதி மற்றும் இயக்குனர் வாசு இவர்கள் இருவரும் இயக்குனர் சி.வி ஸ்ரீதரின் திரைப்படங்களில் பணிபுரிந்து வந்தனர். அந்த சமயத்தில் மீனவ நண்பன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு ஸ்ரீதர் இளமை ஊஞ்சலாடுகிறது என்கிற திரைப்படத்தை இயக்குவதற்காக திட்டமிட்டு இருந்தார்.
சந்தான பாரதியின் யோசனை:
ஆனால் அப்போது ரஜினி கமல் ஆகிய நடிகர்களை அந்த படங்களில் நடிக்க வைக்க எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தார் ஸ்ரீதர். அவர் அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருந்தார்.
அப்போது சந்தான பாரதியும் வாசுவும் கமல் மற்றும் ரஜினிகாந்த் வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என கூறினர். ஸ்ரீதருக்கு கமல்ஹாசனை தெரியும் ஏனெனில் கமல்ஹாசன் சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஆனால் ரஜினிகாந்த் யார் என்று அப்போது ஸ்ரீதருக்கு தெரியாது யாரது ரஜினிகாந்த்? என அவர் கேட்டுள்ளார் அப்போது சந்தான பாரதி ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ரஜினி என ரஜினியை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்கு எம்.எஸ்.வியை தேர்ந்தெடுத்திருந்தார் ஸ்ரீதர். ஆனால் வாசுவும் சந்தான பாரதியும் இளையராஜாவை இசையமைக்க அழைக்கலாம் என கூறினர். ஸ்ரீதருக்கு வெகு நாட்களாக எம்.எஸ்.வியுடன் பழக்கம் இருந்தது இளையராஜாவை அவருக்கு பெரிதாக தெரியவே தெரியாது.
எனவே கோபப்பட்ட ஸ்ரீதர் புது ஆட்களை வைத்து எல்லாம் இசையமைக்க முடியாது எனக்கும் எம்.எஸ்.விக்கும் பல வருட பழக்கம் உள்ளது அவர் தான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எனக் கூறி படத்தை விட்டு இவர்கள் இருவரையும் வெளியில் அனுப்பி விட்டார்.
இளையராஜா எதாவது படங்களில் வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்டார். அதற்காகவே சந்தான பாரதி இந்த முயற்சியை செய்தார். அதன் பிறகு இளையராஜாவின் இசையை பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீதர் திரும்ப சந்தான பாரதியை படத்தில் சேர்த்துக் கொண்டு இளையராஜாவை வைத்துதான் கடைசியில் இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
இதையும் படிங்க: கதையும் பிடிக்கல.. இயக்குனரும் பிடிக்கல..! – விஜயகாந்த் அரை மனதோடு நடித்து ஹிட் அடித்த திரைப்படம்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…