இத்தனை திரைப்படங்களை இயக்கியுள்ளாரா சந்தானபாரதி?!.. அட இது தெரியாம போச்சே!...

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் சந்தான பாரதி. குறிப்பாக பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். எனவே, பெரும்பாலான ரசிகர்களுக்கு இவரை நடிகராகத்தான் தெரியும். ஒரு திரைப்படத்தில் வடிவேல் நடிக்கும் ஒரு காமெடி காட்சியில், அவர் ஒரு காரில் ஏறி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் சந்தானபாரதியை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்பார்.

ஆனால், தான் மலைமீது ஏறி அப்படியே காரோடு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வடிவேலுவுக்கு பீதியை கொடுப்பார். இப்படி பல படங்களில் காமெடி வேடங்கள் அசத்தியிருப்பார். அதேபோல், மைக்கேல் மதன காமராஜன் முதல் விக்ரம் வரை கமல் நடித்துள்ள பல திரைப்படங்களில் சந்தானபாரதி நடித்திருப்பார்.

santhana

santhana

உண்மையில், சந்தானபாரதி கமலின் நெருங்கிய நண்பர். அதனால், தான் நடிக்கும் பெரும்பலான திரைப்படங்களில் சந்தான பாரதியை நடிக்க வைத்திருப்பார் கமல்ஹாசன். நடிகர் என்பதற்கு முன்பே சந்தானபாரதி ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி என பல நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஸ்ரீதரிடம் பி.வாசுவும், சந்தானபாரதியும் உதவியாளராக பணிபுரிந்துள்ளனர்.

paneer

அதன்பின் பாரதி வாசு என்கிற பெயரில் இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படம்தான் ‘பன்னீர் புஷ்பங்கள்’ . இப்படம் 1981ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில்தான் நடிகர் சுரேஷும், நடிகை சாந்தி கிருஷ்ணாவும் அறிமுகமானார்கள். அப்படத்திற்கு பின் பி.வாசுவும், சந்தானபாரதியும் இணைந்து பாரதி வாசு என்கிற பெயரில் நான்கு திரைப்படங்களை இயக்கினர். ஒருகட்டத்தில் வாசு தனியாக படங்களை இயக்க, சந்தான பாரதியும் தனியாக படங்களை இயக்க துவங்கினார்.

santhana bharathi

santhana bharathi

கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் பாடல்களே இல்லாமல் சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை இயக்கியவர் சந்தானபாரதிதான். அதேபோல், என் தமிழ் என் மக்கள், பூவிழி ராஜா, காவலுக்கு கெட்டிக்காரன், குணா, சின்ன மாப்பிள்ளை, மகாநதி, வியட்நாம் காலணி, எங்கிருந்தோ வந்தான் ஆகிய படங்களை சந்தானபாரதி இயக்கியுள்ளார்.

சந்தான பாரதி இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் இவர் இயக்கத்தில் கமல் நடித்த குணா மற்றும் மகாநதி ஆகிய படங்கள் இன்றளவும் தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தளபதி – 67 படத்தின் கதையை காத்துல பறக்கவிட்ட மிஷ்கின்!.. டென்ஷனான விஜய்.. அதிருப்தியில் லோகேஷ்..

Related Articles
Next Story
Share it