மீண்டும் கூட்டு சேரும் அந்த தோல்வி காம்போ… கச்சிதமாக கணக்கு போடும் சந்தானம்… ஒஹோ இதுதான் விஷயமா??
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழும் சந்தானம், தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.
சந்தானம் தமிழ் சினிமாவில் “பேசாத கண்ணும் பேசுமே” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் சிம்புவின் “காதல் அழிவதில்லை”, “அலை” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து “மன்மதமன்”, “சச்சின்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
ஓகே ஓகே
உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான “ஓகே ஓகே” திரைப்படம் சந்தானத்திற்கு திருப்பு முனையான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் இணைந்து “கதிர்வேலன் காதல்”, “நண்பேன்டா” போன்ற திரைப்படங்களில் நடித்தனர்.
ஹீரோவாக களமிறங்கிய சந்தானம்
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “அறை எண் 305-ல் கடவுள்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சந்தானம். அதனை தொடர்ந்து “கண்ணா லட்டு திங்க ஆசையா”, “யாயா”, “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படம் சந்தானம் கேரியரில் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் காமெடியனாக நடிப்பதை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார்.
சந்தானம் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் “டிக்கிலோனா” நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் வெளிவந்த “குலுகுலு” திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை.
காமெடி இல்லாத படம்
சந்தானம் திரைப்படங்களுக்கு மக்கள் எதிர்பார்த்துப்போவது அவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடிகளுக்குத்தான். ஆனால் “குலுகுலு” திரைப்படத்தில் சந்தானம் சீரீயஸான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதலால் ரசிகர்களை இத்திரைப்படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை.
மீண்டும் தோல்வி கூட்டணி
“குலுகுலு” திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் “மேயாத மான்”, “ஆடை” போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சந்தானம் ரத்னகுமாருடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
“குலுகுலு” தோல்வியடைந்த நிலையிலும் சந்தானம் மீண்டும் ரத்னகுமாருடன் இணைவதற்கான காரணம் என்ன தெரியுமா?
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்ஜும் ரத்னகுமாரும் மிக நெருங்கிய நண்பர்கள். மேலும் “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார் ரத்னகுமார். இந்த காரணத்தால் “குலுகுலு” திரைப்படம் நல்லபடியாக வியாபாரம் ஆனதாம்.
இதையும் படிங்க: “வாரிசு படத்த ஒழுங்கா தூக்கிடு”… திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் அஜித் ரசிகர்கள்… இந்த அளவுக்கா இறங்குறது!!
ரத்னகுமார் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள “தளபதி 67” திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றுகிறார். ஆதலால் மீண்டும் ரத்னகுமாருடன் இணைந்தால் அந்த திரைப்படமும் நல்ல வியாபாரம் ஆகும் என கணக்குப்போட்டுத்தான் சந்தானம் காய் நகர்த்துகிறாராம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்,