அந்த நடிகர் மீது காண்டு!.. சந்தானம் ஹீரோவாக மாறிய பின்னணி இதுதான்!...
சின்னத்திரையில் பல வருடங்கள் இருந்து பின்னர் சினிமாவில் பெரிய ரேஞ்சிக்கு சென்றவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம். சில காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் சிவகார்த்திகேயன். ஒருபக்கம் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். நடிகர்கள் தேர்வு நடந்தால் அதில் சென்று கலந்து கொள்வார்.
இப்படித்தான் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் அவர் ஹீரோ ஆனார். அதன்பின் சில படங்கள் நடித்தாலும் எதிர்நீச்சல் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவரின் மார்க்கெட்டை தூக்கி சென்றது.
ஒருபக்கம் லொள்ளுசபாவில் நடித்து கொண்டிருந்த சந்தானத்தை சிம்பு தனது மன்மதன் படத்தில் அறிமுகம் செய்தார். சிவகார்த்திகேயன் துவக்கம் முதலே ஹீரோவாக புரமோட் ஆகிவிட சந்தானம் 10 வருடங்கள் காமெடி நடிகராக மட்டுமே வலம் வந்தார்.
நம்மை போலவே விஜய் டிவியில் இருந்து வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாக பல கோடி சம்பளத்திற்கு சென்றுவிட்டார். நாம் இன்னும் காமெடி மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம் என கடுப்பான சந்தானம் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்தார். அவரும் ஹீரோவாக நடித்து பார்க்கிறார். ஆனால், தில்லுகு துட்டு படத்தை தவிர மற்ற படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இதையும் படிங்க: பாத்தாலே கிறுகிறுன்னு வருது!… இப்படி பண்ணலாமா பிரியா பாப்பா….
எனவே, சந்தானத்திற்குள் எப்போதுமே சிவகார்த்திகேயன் மீது ஒரு பொறாமை இருப்பதாக கூறுகிறார்கள். அதனால்தான் ராஜா ராணி படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைக்க அட்லீ முடிவெடுத்தபோது, அவர் ஹீரோ எனில் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என சந்தானம் கூறினார். அதன் பின்னரே ஆர்யாவை நடிக்க வைத்தார் அட்லீ..
அதேநேரம், சந்தானம் எவ்வளவு முயன்றும் அவரால் சிவகார்த்திகேயன் போல் ஆகமுடியவில்லை என்பதே நிதர்சனம்...