விஜய் டிவி்யில் லொள்ளு சபா உள்ளிட்ட சில காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் சந்தானம். நடிகர் சிம்பு இவரை மன்மதன் படத்தில் அறிமுகம் செய்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். சந்தானம் இல்லாத படமே இல்லை என்கிற நிலையும் உருவானது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தானத்தையே காமெடிக்காக நம்பியிருந்தனர். ஜீவா, ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் சந்தானத்தின் காமெடியாலே ஹிட் அடித்தது.

ஆனால், திடீரென இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பல நடிகர்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தர். ஆனால், தில்லுக்கு துட்டு படத்தை தவிர மற்ற படங்கள் வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வந்தார்.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கிய இப்படத்தில் ஸ்ருபி, ரெட்டிங் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்திருந்தனர். தில்லுக்கு துட்டு படம் போல ஹாரர் காமெடி வகையில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. படம் நன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் குடும்பத்துடன் சென்று சிரித்துவிட்டு வரலாம் என பதிவிட இப்படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. தமிழ்நாட்டில் இதுவரை இப்படம் ரூ.13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், 5லிருந்து 6 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சந்தானம் டிடி ரிட்டன்ஸ் ஹிட் என தெரிந்ததும் தனது சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்திவிட்டாராம். இது அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் ஆடிய ஆட்டம்!.. ஷாலினியால் ராமனாக மாறிய அஜித்.. உண்மையை கசியவிட்ட பிரபலம்!..
