ஃப்ளாப் ஆனாலும் குவியும் படவாய்ப்புகள்...! மவுச காட்ட பணத்தை வாரி இறைக்கும் சந்தானம்...
விஜய் டிவியில் காமெடி ஆர்ட்டிஸ்டாக தன் வாழ்கையை தொடங்கி சின்னத்திரையில் மிகவும் பிரபலமாகி அதன் பின் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சந்தானம். இவரது நகைச்சுவை அனைவருக்கும் பிடித்துப் போக நகைச்சுவையில் முன்னனி நடிகராக வலம் வந்தார் சந்தானம்.
ஏராளமான நடிகர்களுடன் நண்பனாக நடித்து அதன் மூலம் தன் நகைச்சுவையை வெளிக்கொணர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்த சந்தானம் திடீரென ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பல படங்களை தவிர்த்து வந்தார்.
இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியடைந்தது. சமீபகாலமாக இவர் படங்கள் எதுமே சரியாக ஓடவில்லை. அண்மையில் கூட வெளியான குலுகுலு என்ற படமும் ரிலீஸான முதல் நாளே அட்டர் ஃபிளாப். இந்த படத்தை சந்தானத்தின் நண்பர் தான் எடுத்திருக்கிறார். இப்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில் எப்படி தயாரிப்பாளர்கள் இவரை நம்பி படத்தை எடுக்கின்றனர் என்ற சந்தேகம் எழ புதிய அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது படங்கள் தோல்வியடைந்து தயாரிப்பாளர்கள் படவாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றால் தன் மார்கெட் போய்விடும் என கருதி சந்தானமே தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி படத்தை எடுக்குமாறும் அதற்கான செலவை தானே ரெடி பண்ணி தருகிறேன் எனவும் கூறிவருகிறாராம். தொடர்ச்சியாக படங்களில் முகம் காட்டினால் தான் மக்கள் மறக்கமாட்டார்கள் என இந்த வழியில் இறங்கியிருக்கிறாராம். அப்படி தான் குலுகுலு படமும் நண்பர் மூலம் எடுக்கச் சொல்லியிருக்கிறார் சந்தானம்.