ஆழம் தெரியாம விட்டுடோங்க! நீதிமன்றம் வரை சென்ற சந்தானம் படம் - 4 வருஷமா இப்படி ஒரு பிரச்சினையா?
காமெடியில் கலக்கி இப்பொழுது ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்களில் இதுவரைக்கும் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. பெரும்பாலான படங்கள் மண்ணை கவ்வியது. இருந்தாலும் ஒரு சில தயாரிப்பு நிறுவனம் இவரை மீண்டும் காமெடியனாக பார்க்க ஆசைப்படுகின்றன.
பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சந்தானத்தை மீண்டும் காமெடியனாக நடிக்க வைக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் எத்தனை தோல்விகளை பார்த்தாலும் நடிச்சால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற முடிவில் சந்தானம் உறுதியாக இருப்பதால் ஹீரோ டிராக்கிலேயே சென்று கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பே இவர் நடித்து முடித்து இருக்கும் படம் சர்வர் சுந்தரம். அந்தப் படத்தில் சந்தானம் ஒரு செஃப் ஆக நடிக்கிறாராம். அதுவும் துபாய் பின்னணியில் இந்தப் படம் படமாக்கப்பட்டு இருக்கிறதாம். நான்கு வருடங்கள் ஆகியும் ஏன் இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ஒரு புது விநியோகஸ்தரிடம் கொடுத்தார்களாம். அவர் ஒரு சிறிய அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு அதை வாங்கி இருக்கிறார். ஆனால் இதுவரைக்கும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அந்த சமயத்தில் படம் பார்த்த சில பேர் படத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கையும் வைத்திருக்கின்றனர்.
ஆனால் படக்குழு இந்தப் படத்தின் உரிமையை ஏற்கனவே விற்று விட்டதால் வேறொரு விநியோகஸ்தரிடமும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் இவர்களை நம்பி பிரபல தயாரிப்பாளரான ரமேஷ் பிள்ளை எட்டரை கோடி தொகையை பைனான்ஸ் செய்திருக்கிறாராம்.
பணம் போட்ட ரமேஷ் பிள்ளையும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறாராம். படத்தை இந்த மாத இறுதியில் எப்படியாவது வெளியிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருப்பதால் நீதிமன்றத்தை நாட இருக்கிறதாம் இந்த சர்வர் சுந்தரம் திரைப்படம்.
இதையும் படிங்க : எங்கிட்டு போனாலும் முட்டுச்சந்தா இருக்கே? அஞ்சலியின் 50 வது படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?