Connect with us
santhanam

Cinema News

இப்பதான்டா ஒரு ஹிட்டு கொடுத்தேன்!.. சந்தானத்துக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பெண்டிங் படங்கள்!.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சந்தானம். லொள்ளு சபா மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். மன்மதன் படத்தில் நடிக்க துவங்கி பல திரைப்படங்களில் காமெடியானாக நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் மாறினார். படத்தின் ஹிட்டுக்கு சந்தானம் தேவை என பல இயக்குனர்களும் நினைத்தனர்.

ஆர்யா, ஜீவா, உதயநிதி ஆகியோரின் திரைப்படங்களில் சந்தானம் கண்டிப்பாக இருப்பார். ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இதையும் படிங்க: அன் லிமிட்டேட் சைஸ் அள்ளுது!.. யாஷிகாவை ஜூம் பண்ணிப் பாத்து மூடேத்தும் புள்ளிங்கோ..

ஆனால், தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மட்டும் ஓடியது. மற்ற படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், சந்தானம் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இந்நிலையில்தான் அவரின் நடிப்பில் உருவான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இப்படம் நன்றாக இருப்பதாகவும், காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாகவும் பலரும் சமூகவலைத்தளங்களில் பேச இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், தியேட்டரில் கூட்டம் அதிகரிக்க வசூலும் அதிகரித்தது. சந்தானம் நடித்த படத்திலேயே டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது. இது சந்தானத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இனிமேல் காமெடி கலந்த ஹீரோவாக நடிக்கலாம் என்கிற நம்பிக்கையை அவருக்கு கொடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த படம் ஹிட் அடிக்கவும், அவர் ஹீரோவாக நடித்து வெளியாகாமல் இருக்கும் சில திரைப்படங்களை தூசி தட்டி வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். கண்டிப்பாக அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறாது. பல வருடங்கள் போராடி சந்தானம் இப்போதுதான் ஒரு ஹிட் கொடுத்துள்ளார். அந்த படங்கள் வெளியாகி ஃபிளாப் ஆனால் சந்தானத்தின் மார்க்கெட் மீண்டும் கீழே இறங்கிவிடும் என சொல்கிறார்கள் விபரம் அறி்ந்தவர்கள்.

இதையும் படிங்க: செம மாஸ் டைட்டிலுடன் களம் இறங்கும் ரஜினி… சும்மா தெறிக்கும் ‘தலைவர் 170’ அப்டேட்..

google news
Continue Reading

More in Cinema News

To Top