பல வருட ஆசை!.. போயஸ்கார்டனில் வீடு வாங்கிய சந்தானம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

by சிவா |
santhanam
X

சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியனாக இருந்தவர் சந்தானம். விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிலரில் சந்தானமும் ஒருவர். கவுண்டமணி கோவை பாஷையும், வடிவேலு மதுரை பாஷையும் பேசி நடித்தது போல பக்கா மெட்ராஸ் பாஷை பேசி நடித்தவர் சந்தானம். அப்பாடக்கர் போன்ற வார்த்தைகளையெல்லாம் இளைஞர்களிடம் பிரபலப்படுத்தியவர் இவர்.

santhanam

ஜீவா, ஆர்யா, உதயநிதி ஆகியோரின் படங்கள் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அதனால்தான் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்தபோது இவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மட்டுமல்ல. பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிர்ந்து போனார்கள். சந்தானம் சென்ற பின் இப்போது வரை தமிழ் சினிமாவில் காமெடிக்கான பஞ்சம் நிலவுகிறது என்பதை மறுக்கவே முடியாது.

ஆனால், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதில் சந்தானம் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. சந்தானத்திடம் நாங்கள் காமெடியை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்பதை ரசிகர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

santhanam

சந்தானம் சமீபத்தில் போயஸ்கார்டனில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அது அவருக்கு பல வருட கனவு என சொல்லப்படுகிறது. சந்தானம் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். பல்லாவரத்தில் தங்கியிருந்த அவர் ரஜினியை பார்ப்பதற்காக போயஸ்கார்டனுக்கு நண்பர்களுடன் செல்வாராம். அப்போது அந்த ஏரியாவை பார்த்து ‘இந்த ஏரியாவில் நமக்கும் ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும்?’ என யோசிப்பாரம். கடந்த சில வருடங்களாக அங்கே அவருக்கென ஒரு அலுவலகத்தை அமைக்கவும் அவர் முயற்சி செய்தார். ஆனால், வாடகை அதிகமாக இருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டாராம்.

எப்படியோ சந்தானத்தின் சிறு வயது ஆசை இப்போது நிறைவேறிவிட்டது.

இதையும் படிங்க: விஜய் மட்டும்தான் நன்றியோடு இருக்கார்.. அவங்கலாம் நன்றி கெட்டவர்கள்! – கோபத்தில் வெடிக்கும் திருப்பூர் சுப்ரமணியன்

Next Story