நீங்கதான் சூப்பர்ஸ்டாரா?!. சந்தானத்திடம் கேட்ட ரஜினி!.. எல்லாம் ஆர்யா பண்ண வேலை!…

by சிவா |   ( Updated:2025-05-06 00:36:26  )
arya
X

#image_title

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். ஆர்யா, ஜீவா உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களில் அவரின் நண்பராக வந்து பல படங்களிலும் ரசிகர்களை சிரிக்கவைத்தார். இவர் பேசிய ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா’ போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் பிரபலமாகி ஆட்டோவின் பின்னால் எழுதும் வரை ரீச் ஆனது.

எனவே சென்னையில் புழங்கும் புதுப்புது வார்த்தைகளை தேடி கண்டிபிடித்து தனது படங்களில் பேசி வந்தார் சந்தானம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களிலும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்தது. ரஜினியுடன் எந்திரன், லிங்கா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

விஜயுன் சச்சின், அழகிய தமிழ் மகன், தலைவா, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் பில்லா, வீரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கமலை தவிர எல்லா நடிகர்களின் படங்களிலும் சந்தானம் நடித்டிருக்கிறார். நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம் திடீரென இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

santhanam
santhanam

கடந்த 10 வருடங்களாக அவர் காமெடி வேடத்தில் நடிக்கவில்லை. மேலும், அவர் ஹீரோவாக நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டியது. ஆனாலும், சந்தானம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழ் சினிமாவில் காமெடி வறட்சி நிலவும் நிலையில் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முன்வரவேண்டும் என கோலிவுட்டும், ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போது சிம்புவின் புதிய படத்தில் அவருடன் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் சந்தானம். இந்த படத்தின் விழாவில் சந்தானம், ஆர்யா, சிம்பு என பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால் ரஜினியிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பற்றி பேசியிருக்கிறார்.

ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடிக்கும்போது டைட்டிலில் என் பெயருக்கு முன் காமெடி சூப்பர்ஸ்டார் என ஆர்யா போட்டுவிட்டான். லிங்கா படத்தில் ரஜினி சாருடன் நடித்தபோது ‘நீங்க காமெடி சூப்பர்ஸ்டாரா?’ என என்னிடம் கேட்டுவிட்டார். ‘இல்ல சார். அது ஆர்யா பண்ண வேலை. அவன்தான் டைட்டில் கார்ட்ல அப்படி போட்டான்’ என நான் சொல்ல அவரோ ‘நீங்க சொல்லாமதான் அவர் போட்டாரா?’ என கேட்டார். இப்படி ஆர்யாவால் பல பிரச்சனைகளை நான் சந்தித்திருக்கிறேன்’ என ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசினார் சந்தானம்.

Next Story