ஒன்னுலயே ஹிட் இல்ல...ரெண்டு தேவையா?....ஓவர் ரிஸ்க் எடுக்கும் சந்தானம்....
விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஒரு காமெடி ஆர்டிஸ்டாக வந்து இன்று திரையுலகமே ஹூரோவாக தலையில் தூக்கி ஆடும் நடிகர் சந்தானம் அவர்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சிம்பு நடித்த வல்லவன் படத்தில் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து காமெடி நடிகராக எல்லா முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தொடர்ந்து 5 முறை ஃபிலிம் ஃபேர் அவார்ட்ஸையும் சிறந்த காமெடி நடிகருக்காக தட்டிச் சென்றார். இடையில் நடந்த சில பல பிரச்சினைகளால் நடித்தால் ஹூரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று தற்போது படம் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இவர் நாயகனாக ஏறக்குறைய 14 படங்கள் நடித்துள்ளார். அதில் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன சில படங்கள் ப்டு ஃபிளாப்பும் ஆனது. அண்மையில் நடித்த படங்களும் சொல்லும்படியாக அமையவில்லை.ஏகப்பட்ட வேதனையில் இருந்த சந்தானத்திற்கு கன்னடத்தில் இருந்து ஒரு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன், சிம்பு போன்றோர் தெலுங்கு பக்கம் ஓடிக்கொண்டிருக்க சந்தானம் அவர்களோ பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தமிழ் கன்னடம் மொழியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆதலால் கெத்து காட்டி வரும் சந்தானம் விட்டதை பிடிப்பாரா என திரையுலக வட்டாரங்கள் காத்திருக்கின்றனர்.