இப்படி ஒரு தண்டனைய கொடுப்பாருனு நினைக்கல! நடிக்க கூப்பிட்ட சந்தானத்தை வச்சு செஞ்ச பவர்ஸ்டார்!..

by Rohini |
santhanam
X

santhanam

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெல்லாம் பரவி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலமாகவே சந்தானத்தை மக்கள் அறிந்தனர்.

டிவியில் மட்டும் உன் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தால் போதாது. பெரிய திரையிலும் உன் ஆட்டத்தை காட்ட வேண்டும் என்று சொல்லி கை பிடித்து சந்தானத்தை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய பெருமை நடிகர் சிம்புவையே சேரும். மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிம்பு.

இதையும் படிங்க : வருங்காலத்துக்கு வாங்க… ஓவர் குஷி மோடில் இருக்கும் வெங்கட் பிரபு! என்ன வரிசையா அப்டேட் விடுறாரு!

அதுமட்டுமில்லாமல் சிம்புவின் அடுத்தடுத்த எல்லா படங்களிலும் சந்தானத்தை பார்க்க முடிந்தது. அந்தளவுக்கு சந்தானத்திற்கு வழி காட்டியவர் சிம்பு. இதை பல பேட்டிகளில் சந்தானமே கூறியிருக்கிறார். மேலும் அவர் ஹீரோ ஆனதை பற்றியும் சிம்பு விமர்சித்தாராம். அதாவது ஏன் இந்த முடிவை எடுத்தாய்? எங்களுடனேயே நடிக்க வேண்டியதுதானே ? என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி சந்தானத்தின் வெற்றிக்கு சிம்பு ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார். நகைச்சுவை நடிகராகவே வலம் வந்து கொண்டிருந்த சந்தானத்திற்குள் ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் எட்டிப்பார்க்க முதன் முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார்.

அதன் பிறகு தான் தன்னுடைய ஹீரோ பயணத்தை தொடர்ந்தார். அவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் தான் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பிரபலமானார். இந்தப் படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது சந்தானம் பல வேடிக்கையான விஷயங்களை பகிர்ந்தார்.

இதையும் படிங்க : தியேட்டரில் அலப்பறை கொடுத்த விஜய்… அதுவும் இவர் படத்துக்கா? வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

அதாவது மூன்று ஹீரோக்களை சுற்றி அமையும் படமாக இந்த கதை அமைந்திருக்கும். அதில் சந்தானம் மற்றும் சேது ஆகியோர் முடிவாகி விட்டதாம். மூன்றாவது நபராக யாரை போடலாம் என தேடிக் கொண்டிருக்க பவர் ஸ்டாரின் நடிப்பில் வெளிவந்த லத்திகா பட போஸ்டரை சந்தானம் பார்த்திருக்கிறார்.

உடனே இவர்தான் சரியாக இருப்பார் என பவர் ஸ்டாரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பவர் ஸ்டார் என் பட போஸ்டரை பார்த்து மட்டும் வந்து என்னிடம் கேட்டால் அது நன்றாக இருக்காது. அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பையும் நீங்கள் பார்க்க வேண்டும் என சொல்லி அந்தப் படத்தை போட்டுக் காட்டினாராம் பவர் ஸ்டார்.

இதையும் படிங்க : பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் தனுஷ் பட நடிகை!.. பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!..

இதை சந்தானம் கூறும் போது ‘ஐயோ இது வேறயா? உள்ளே கூட்டிட்டு போய் படத்தை போட்டு விட்டு கதவை சாத்திட்டாரு. ஒரே சவுண்ட், முடியல. முழு படத்தையும் பார்க்க வச்சிட்டாரு ’ என நகைச்சுவை கலந்த கடுப்பில் கூறினார் சந்தானம். அதன் பிறகே இந்தப் படத்தில் பவர் ஸ்டார் கமிட் ஆனாராம்.

Next Story