அவர ஓவர் டேக் பண்ண முடியுமா...? நீ படிச்ச ஸ்கூல்ல அவரு ஹெட் மாஸ்டரு...! வீம்பு பண்ணும் சந்தானம்...!

by Rohini |   ( Updated:2022-09-26 11:53:50  )
SAN_main_cine
X

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நகைச்சுவையில் சக்க போடு போட்ட நடிகர் யாரென்றால் நடிகர் சந்தானம் தான்.
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரிலீஸ் ஆகுற படங்களை எல்லாம் பிராங் பண்ணி அதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் சந்தானம்.

san1_cine

இவரின் திறமையை பார்த்து நடிகர் டி.ராஜேந்திரன் தான் இவரை அறிமுகப்படுத்தினார். மேலும் அதே விஜய் டிவியில் இருந்து வந்து இன்று ஒட்டுமொத்த சினிமாவுமே அன்னாந்து பார்க்கிற அளவுக்கு வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இருவரும் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான். இருவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் தான் இருக்கின்றன.

san2_cine

ஆனால் சிவகார்த்திகேயன் அளவுக்கும் சந்தானத்தால் முன்னனி இடத்தை பெற முடியவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு படி முன்னேறி தெலுங்கிலும் நம்பர் ஒன் ஹீரோவாக தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இவர் பேன் இந்தியா ஸ்டார் என்றால் சந்தானம் இன்னும் பட்ஜெட் ஸ்டாராகவே இருக்கிறார். சொல்லப்போனால் காமெடியால் கிடைத்த அங்கீகாரம் கூட ஹீரோவாக நடிக்க வந்தபிறகு சந்தானத்திற்கு கிடைக்கவில்லை. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று வீம்பு பண்ணிக் கொண்டிருக்கிறார்.

san3_cine

இன்று வரை அவரின் நகைச்சுவையை எதிர்பார்த்து பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் சந்தானம் விடாபடியாக இருக்கிறார். அந்த கால நடிகர்களான தேங்காய் சீனிவாசன், நாகேஷ் இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ஒருபக்கம் தன் நகைச்சுவையை விடவில்லை. ஏன் யோகிபாபு கூட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இன்னும் காமெடி ஆர்ட்டிஸ்ட்டாக தான் வலம் வருகிறார். சந்தானத்தின் வீம்பால் ரசிகர்களும் அவரை சீக்கிரம் மறந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

Next Story