ஏகே-62 வில் களமிறங்கும் சந்தானம்!.. யாருக்கும் அசையாதவர்.. அஜித் படம் மட்டும் எப்படி? பின்னனியில் இருக்கும் காரணம்..
துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது. அஜித்திற்கு வில்லனாக அரவிந்த் சாமியை விக்னேஷ் சிவன் அணுகியிருக்கிறார்.
ஆனால் அரவிந்த் சாமி தரப்பில் இதுவரை ஒரு தெளிவான முடிவை சொல்லவில்லை. அதன் பின் நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. நடித்தால் ஹீரோ என்ற மன நிலையில் இருக்கும் சந்தானம் எப்படி அஜித் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
அதற்கு பின்னனியில் ஒரு காரணமே இருக்கிறதாம். சமீபகாலமாகவே சந்தானம் தனக்கென ஒரு ரூட்டை பிடித்துக் கொண்டு சப்தமே இல்லாமல் பயணம் செய்து வருகிறார். எத்தனையோ நடிகர்கள் தன் படங்களுக்கு காமெடி ரோலில் நடிக்க சந்தானத்தை அணுகியும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதையும் படிங்க : கொஞ்சம் விட்டுருந்தா ‘துணிவு’ கைமாறி போயிருக்கும்!.. வினோத்தை ஏளனமாக பார்த்த நடிகர்.. ப்ளான் பண்ணி தூக்கிய அஜித்!..
ஆனால் அஜித்தின் படத்தில் மட்டும் இணைந்தது விக்னேஷ் சிவன் மூலமாக தானாம். ஒரு படத்தின் படப்பிடிப்பில் சந்தானம் இருந்த சமயத்தில் அவரை பார்க்க விக்னேஷ் சிவன் சென்றிருக்கிறார். அவரிடம் படத்தின் மொத்த கதையையும் விக்னேஷ் சிவன் சொன்னாராம்.
கூடவே படத்தில் சந்தானம் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி அதற்கு சரியான நபர் நீங்கள் தான் என்று சொன்னாராம். மேலும் இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான வரவேற்பும் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். அதை எல்லாம் கேட்டுவிட்டு சந்தானம் ஒரு கண்டீசன் மட்டும் போட்டாராம்.
படத்தில் நடிக்கிறேன். ஆனால் காமெடி மட்டும் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். ஏனெனில் இந்த படத்தில் நகைச்சுவை செய்து அதன் மூலம் மறுபடியும் காமெடி ரோலுக்கு நடிக்க சொல்லி படவாய்ப்புகள் வரும் என்ற காரணத்தினால் தான் இப்படி ஒரு கண்டீசன் போட்டிருக்கிறாராம் சந்தானம்.
இதற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம் விக்னேஷ் சிவன். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு நண்பராக வருகிறாராம் சந்தானம். ஏற்கெனவே பில்லா, கிரீடம் போன்ற படங்களில் அஜித்தின் நண்பராக நடித்திருப்பார். மேலும் வீரம் படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்திருப்பார். அதன் பிறகு ஏகே-62வில் அஜித்துடன் மீண்டும் இணைகிறார்.