மாநகரம், கைதி என இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கி ஸ்டார் இயக்குனாராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். நடிகர்களுக்கு இருப்பது போல இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கும் ஒரு படத்தின் இருக்கும் ஒரு கதாபாத்திரம் அவர் இயக்கும் அடுத்த படத்தில் இடம் பெறுவதை எல்.சி.யூ என அழைக்கிறார்கள்.
விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எதிர்பார்ப்போடு வெளியானது. அதேநேரம், அந்த படம் எல்லா ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என இப்படம் மீது பொதுவான விமர்சனம் எழுந்தது.
இதையும் படிங்க: அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..
ஆனாலும், படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று எல்லோருக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இப்போது லோகேஷ் ரஜினியை வைத்து எடுக்கவுள்ள புதிய படத்திற்கான வேலைகளை துவங்கவுள்ளார். லியோ படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் அடுத்த படம் எல்லோருக்கும் பிடிக்கும்பிடி அமையவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். உண்மையில் அவருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றுதான் லோகேஷ் சொல்லியிருக்கிறார். அவருக்கும் அந்த படத்தில் வரும் கவுரி கிஷான் இருவருக்கும் காதல் என்பது போலவும், இருவருக்கும் ஒரு பாடல் காட்சியை கூட லோகேஷ் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: லியோ வாய்ப்பை இழந்த நடிகர்களுக்கு எல்சியூவில் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்… எக்கசக்க ஸ்பெஷலாம்..!
ஆனால், படத்தின் நீளம் கருதி சாந்தனு நடித்த பல காட்சிகளை எடிட்டிங்கில் வெட்டிவிட்டாராம். எனவே, படத்தில் சாந்தனுவுக்கு நெகட்டிவ் வேடம் போல் மாறிவிட்டது. இதை சாந்தனுவே ஒரு பேட்டியில் கூறி தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். படம் பார்த்து அப்செட் ஆன சாந்தனு லோகேஷிடம் சரியாக கூட பேசுவதில்லையாம்.
சாந்தனுவை வீட்டிற்கு சாப்பிட லோகேஷ் அழைத்தபோது கூட அவர் போகவில்லையாம். இதுபற்றி லியோ படப்பிடிப்பில் விஜயிடம் லோகேஷ் சொன்னபோது ‘நீ அவன வச்சி செஞ்சதுக்கு உன் வீட்டுக்கு அவன் எப்படி வருவான்?’ என நக்கலடித்தாராம் விஜய். ஆனாலும், எதிர்காலத்தில் தான் இயக்கும் ஒரு படத்தில் சாந்தனுவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: கைதி பட கிளைமேக்ஸ் சீனை அங்க இருந்துதான் சுட்டேன்!.. ஓப்பன ஒத்துகொண்ட லோகேஷ்!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…