எப்பா உனக்கும் சினிமாவிற்கும் ராசியே இல்ல!.. எல்லாப் பக்கமும் முட்டுது.. சாந்தனுவால் துருவ் விக்ரமின் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சாந்தனு. பிரபல திரையுலகு வாரிசு என்றாலும் இன்னும் தன் இடத்தை அடைய போராடிக் கொண்டு வருகிறார்.ஏகப்பட்ட படங்களில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு படங்கள் ஓடவில்லை.
அதன்பின் விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு சைடு ஹீரோவாக களமிறங்கினார். நீண்ட நாள்களுக்கு பிறகு ‘ராவணக்கோட்டம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சாந்தனு. அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.
படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதற்கான இசை வெளியீட்டு விழாவும் துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் சென்று சாந்தனுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தப் படம் கபடி விளையாட்டு விழாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்திருக்கிறதாம்.
இந்த நிலையில் நடிகர் விக்ரமின் வாரிசான துருவ் விக்ரமை வைத்து ஏற்கெனவே மாரிசெல்வராஜ் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் தற்போது அந்தப் படத்தை கிடப்பில் போட்டிருக்கிறாராம். ஏனெனில் மாரிசெல்வராஜும் படமும் கபடியை மையமாக வைத்து அமைய இருக்கிற படமாம்.
அதனால் சாந்தனுவின் ராவணக்கோட்டம் வெளியாகும் வரை மாரி செல்வராஜ் தன் படத்தை இயக்கப் போவதில்லையாம். ஏனெனில் இவர் நினைத்திருக்கும் கதையும் ராவணக்கோட்டம் படத்தின் கதையும் ஒன்று போல் இருக்கிறதா? அல்லது ஒரு சில காட்சிகள் மட்டும் கபடியை காண்பீக்கிறார்களா? என்று பார்த்த பின்னரே துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
இதில் துருவ் விக்ரமையும் எப்படியாவது தன்னை போல் சினிமாவில் நிலை நிறுத்த வேண்டும் என மறைமுகமாக விக்ரம் அவரது மகனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இருந்தாலும் அப்பா அளவுக்கு இன்னும் ஒரு சதவீதம் கூட கால் எடுத்து வைக்க வில்லை.
இதையும் படிங்க : சினிமாவில் இதெல்லாம் சகஜம்மப்பா!.. ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கே டகால்டி காட்டிய சிவகார்த்திகேயன்..