இந்த நடிகைக்கு இந்த நிலைமையா?... ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ நடிகையின் அதிர்ச்சி அப்டேட்...
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பானுப்பிரியா. இவரின் தங்கை சாந்திப்பிரியா. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தில் இடம் பெற்ற மதுரை மரிக்கொழுந்து வாசம், செண்பகமே செண்பகமே ஆகிய பாடல்கள் இப்போதும் கிராமங்களில் ஒலித்துகொண்டிருக்கிறது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். பாலிவுட்டில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருப்பார். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.ஆனால், கடந்த பல வருடங்களாக இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் நடிப்பு துறைக்கு திரும்ப முடிவெடுத்துள்ளார். ஆனால், சினிமாவில் இல்லை. ஜீ ஸ்டுடியோச் ஒரிஜினல் நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு வெப் சீரியஸில் சாந்திப்பிரியா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இவரின் அக்கா பானுப்பிரியா எவ்வளவு பெரிய நடிகை?
ஆனால், அவரின் தங்கை சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வெப் சீரியஸில் நடிக்கவிருப்பது காலத்தின் கோலமாகும். ஆனாலும், இவரை மீண்டும் திரையில் காண 80 கிட்ஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.