சூர்யா ரசிகர்களே ரெடியா!.. அடுத்த ஆட்டத்தை போட நடனப்புயல் சந்தோஷ் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாரு!

by Saranya M |   ( Updated:2025-04-09 04:45:55  )
சூர்யா ரசிகர்களே ரெடியா!.. அடுத்த ஆட்டத்தை போட நடனப்புயல் சந்தோஷ் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாரு!
X

நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ திரைப்படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் தற்போது மூன்றாவது பாடலும் வெளியாக உள்ளதாக சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தில் சந்தோஷ் நாரயணன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ரெட்ரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணாடி பூவே பாடலில் சூர்யா சிறையில் காதலியை நினைத்து பாடும் மெலோடி பாடலாக உருவாகி இருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவதாக வெளியான கனிமா பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி வருகிறது. அந்த பாடலில் சூர்யா முகத்தில் ரியாக்‌ஷனே இல்லாமல் ரெட்ரோ படத்தின் கேரக்டராகவே சிலபஸ் தவறாமல் ஆடியிருந்தார். ரசிகர்களின் எதிர்ப்பார்பை புரிந்துக்கொண்ட 2டி எண்டர்டைன்மண்ட் சூர்யா அவுட் ஆஃப் சிலபஸில் என்ஜாய் செய்து ஆடிய ஆட்டத்தை வெளியிட்டிருந்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கனிமா பாடலில் ஆடியிருந்தார்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரெட்ரோ படத்தின் அடுத்த பாடலுக்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். சீக்கிரமே 3வது சிங்கிள் வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோசமடைய செய்ய காத்திருக்கிறது.

ஏப்ரல் மாதம் 10ம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி செட் செய்யும் வசூல் வேட்டையை சூர்யாவின் மே 1ம் தேதி ரிலீஸான ரெட்ரோ முறியடிக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Next Story