#image_title
கங்குவா படத்தில் திஷா பதானி பிகினியுடன் வர செம ஜாலியாக டான்ஸ் போட்ட சூர்யாவை கனிமா முனிமான்னு கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷ் நாராயணன் கூட சேர்ந்துக் கொண்டு படாத பாடு படுத்தியிருப்பது தற்போது வெளியாகியுள்ள லிரிக் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.
ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட ரகிட கல்யாண பாடல் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற மாமதுர அன்னக்கொடி அளவுக்கு இந்த பாடல் அட்டகாசமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு பிம்பிலிக்கா பிலாப்பி என்கிற அளவுக்குத்தான் பாடலை போட்டுக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
#image_title
சூர்யா பாவம் பாட்ஷா கோட்டை போட்டுக் கொண்டு எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் ஆடுவதை பார்க்கவே பாவமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர். அரபிக் குத்து, புட்டபொம்மா பாடல்களில் ஆடிய கால் அழகி பூஜா ஹெக்டேவின் லெக் பீஸ் எங்கடா காணோம் என ரசிகர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.
எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், இது சூர்யா பாடல் என சொல்லிவிட்டு கடைசி வரை மியூசிக் டைரக்டர் சந்தோஷ நாராயணன் அவருடைய மகள் தீ வந்து டார்ச்சர் பண்ணுவதை விட அதிகமாகவே ஸ்க்ரீனில் கடைசி வரை டார்ச்சர் செய்வதைத்தான் தாங்கவே முடியவில்லை.
சூர்யாவுக்கு இந்த படமாவது எப்படியாவது ஓட வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணாடிப்பூவே, கனிமா முனிமான்னு கார்த்திக் சுப்புராஜ் சோதனை முயற்சிகளை அதிகமாகவே எடுத்து சோதித்து வருகிறார். மே 1ம் தேதி படத்தின் ரிசல்ட் நல்லா வந்தா சரிதான்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…
சமீபகாலமாக லைக்கா…
Good Bad…
இந்திய திரைப்பட…
இளையராஜா தமிழ்சினிமா…