‘அனி’ பாம் வெடிச்ச நேரம்.. ரஜினி படம் மிஸ்ஸான ரீஸன் இதுதான்! சந்தோஷ் நாராயணன் பேட்டி

by Rohini |   ( Updated:2025-04-28 03:56:52  )
aniruth
X

aniruth

Santhosh Narayanan: இளையராஜா ரஹ்மான் இவர்களுக்கு அடுத்த சென்சேஷன் இசையமைப்பாளர்களாக மாறியிருப்பவர்கள் ஏராளம். அதிலும் அனிருத் ஒரு பெரிய பூகம்பமாக மாறினார். சிறு வயதிலேயே இசையமைப்பாளராக வந்து இன்று வெளி நாடுகளில் ஏராளமான கச்சேரிகளை நடத்தி உலகமே அறியும் ஒரு இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் அனிருத். ரஜினி, கமல், அஜித், விஜய் என இவர்கள் படத்திற்கு அனிருத்தான் இசை என்ற சூழ்நிலையை உருவாக்கினார்.

டிரெண்டிங்கை மாற்றியவர்கள்: ஆனால் அந்த டிரெண்ட் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. புது புது இசையமைப்பாளர்களின் வருகை ஆரம்பித்துவிட்டது. தனுஷ் படம் என்றாலே ஜிவிதான் என்று இருந்த நிலையில் ஜிவியும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் அவர் இசையமைக்கும் படங்களும் குறைந்து போனது. அந்த வகையில் சந்தோஷ் நாராயணன் ஒன்று இரண்டு படங்களுக்கு அவ்வப்போது எட்டி பார்த்தார்.

ஆனால் இப்போது ஒரு பக்கம் சந்தோஷ் நாராயணன் இன்னொரு பக்கம் ஜிவி என கோடம்பாக்கமே இவர்கள் வீட்டு வாசலில்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து ஜிவி இசையமைத்த படங்கள் தொடர்ச்சியான ஹிட்டை கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கம் சந்தோஷ் நாராயணன் இசையும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படத்திற்கு இவர்தான் இசை.

சென்ஷேசன் பாடல்: இவரின் கன்னிமா பாடல் சென்சேஷன் பாடலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இவர் தற்போது ஒரு விழா மேடையில் ரெட்ரோ படத்தில் இசையமைத்ததை பற்றி பகிர்ந்திருக்கிறார். ரெட்ரோ படத்தில் மிகவும் சுதந்திரமாக தன்னால் இசையமைக்க முடிந்தது என்று சந்தோஷ் நாராயணன் கூறினார். மேலும் இந்த காம்போவில்தான் இசையமைக்க வேண்டும் என்று என்றைக்குமே நான் முயற்சி செய்ததே இல்லை.

தானா போய் நிற்பதில்லை: தன்னை தேடி வரும் படங்களில்தான் பெரும்பாலும் இசையமைத்து வருகிறேன். ஒரு முறை கார்த்திக் சுப்பராஜிடம்தான் கேட்டேன். ரஜினியின் பேட்ட படத்திற்கு கார்த்திக் நாம சேர்ந்து பண்ணலாம் என கேட்டேன். அவனும் சரி சொல்றேன் என சொன்னான். என்ன கார்த்திக் இப்படி சொல்ற? என நினைத்தேன். ஆனால் அப்போது அனியின் பெரிய பாம் வெடித்தது.

சரி யூத்தோட வொர்க் பண்றதும் ஒரு மாதிரியான சூழல். அதுவும் நல்லாத்தானே இருக்கும். அது பெரிய ஹிட்டாச்சு. அதன் பிறகு யாரிடமும் நானா போய் கேட்குறதே இல்ல என சந்தோஷ் நாராயணன் கூறினார்.

Next Story