ஒழுங்கா லவ் பன்னிரு... இல்லனா மொக்க பையன கல்யாணம் பண்ணி வச்சிருவேன்.! மிரட்டும் சந்தோஷ் நாராயணன்.!
கபாலி, காலா, வடசென்னை, மெட்ராஸ் என பல்வேறு தரமான திரைப்படங்களில் வெறித்தனமான இசையை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
இவர் மேடைகளில் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால், அவரை போல ஜாலியாக இருக்கும் மனிதனை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் கலகலப்பாக இருப்பார் என்று கூறுவார்கள்.
இவருடைய மூத்த மகளான தீ ஒரு பாடகி ஆவார். இவர் ரவுடி பேபி எனும் பாடல் மூலம் புகழ் பெற்றவர். அதன் பிறகு என்ஜாமி என்ஜாமி எனும் ஆல்பம் பாடல் இவரை இசையுலகில் அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.
இதையும் படியுங்களேன் - கார் கொடுத்தார்.. வாட்ச் கொடுத்தார்.. உங்களுக்கு என்ன கொடுத்தார்.? அனிருத்தின் அசத்தல் பதில் இதோ..
அண்மையில் தனது தந்தை சந்தோஷ் நாராயணனுடன் ஒரு நேர்காணலில் பாடகி தீ கலந்துகொண்டார். அப்போது சந்தோஷ் நாராயணனிடம், உங்கள் மகள் காதலித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. உடனே சந்தோஷ் நாராயணன், ' நான் அவளிடம் கூறியுள்ளேன். ' நீ ஒழுங்காக நல்ல பையனா பார்த்து காதலித்து கொள். அப்படி இல்லை என்றால் ஒரு மொக்க பையனை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைத்து விடுவேன்.' என்று சொல்லி வைத்துள்ளேன்.' என்று கூறினார்.
இப்படி ஒரு பதிலை அந்த தொகுப்பாளினி எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு வெளிப்படையாக கலகலப்பாக பேசும் தந்தை யாருக்கு தான் கிடைக்கும் என்று பலரும் ஆச்சரியமாக சந்தோஷ் நாராயணனை பார்த்து வருகின்றனர்.