மருதமலை முருகனிடம் சண்டைக்கு நின்ற சாண்டோ சின்னப்ப தேவர்...கேட்ட காசினை உடனே கொடுத்த கடவுள்...

by Akhilan |   ( Updated:2022-10-27 05:55:19  )
சின்னப்ப தேவர்
X

சின்னப்ப தேவர்

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக இருந்த சாண்டோ சின்னப்ப தேவர் முருகனிடம் சண்டையிட்டு வெற்றி கண்ட ஒரு சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.

உடல் நிறைய சந்தனம், வேஷ்டி சட்டை இப்படி ஒருவரை யோசித்தால் உங்களுக்கு வினு சக்ரவர்த்தி நியாபகம் வருகிறதா? ஆனால் இல்லை. இதுதான் சாண்டோ சின்னப்ப தேவரின் தினசரி உடை அலங்காரமே. அவர் கஷ்டத்தில் துவங்கிய தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான் சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

சின்னப்ப தேவர்

சின்னப்ப தேவர்

சின்னப்ப தேவர் தினமும் முருகன் படத்தின் மீது நின்றுக்கொண்டு அவரினை திட்டுவதையே வழக்கமாக கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் ஒருமுறை அவரிடம் சண்டையே போட மருதமலை படியேறிய சம்பவமும் நடந்து இருக்கிறது.

எப்போதும் போல தேவர் இட்லி கடையில் 2 இட்லிக்கு 2 லிட்டர் சாம்பாரை வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் தேவர் திரும்பி கொடுக்கவில்லை என்பதாலே வேட்டி போட்டேன் என்றாராம். அன்றைய காலத்தில் கழுத்தில் வேட்டி போட்டு இழுப்பதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். இரண்டு நாட்களில் திருப்பிக் கொடுப்பதாக தேவர் சொன்னதும் அவர் சென்று விட்டார்.

சின்னப்ப தேவர்

சின்னப்ப தேவர்

இதில் கடுப்பான தேவர் என் மேலேயே ஒருவன் வேட்டி போட்டுவிட்டான். நியெல்லாம் கடவுளா என ஒரு கம்பை எடுத்துக்கொண்டு முருகனுடன் சண்டையிட மருதமலைக்கு சென்றாராம். எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளில் எல்லாம் திட்டிக்கொண்டே படியேறி இருக்கிறார். அப்போது, சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த சிகரெட் பெட்டியில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததாம். அதை தேவர் எடுத்து பார்க்க பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. தொடர்ந்து தேவருக்கு கண்ணீரே வந்துவிட்டதாம். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தாராம்.

Next Story