சிகரெட்டை ஊதி தள்ளும் நடிகை.. வெளியான போட்டோ.. ஷாக்கான ரசிகர்கள்!

மலையாளத்தில் 1998ல் 'கல்லு கொண்டொரு பெண்ணு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. அதன்பின் அங்கு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் 2001ல் விக்ரம் பார்வையற்றவராக நடித்த காசி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்கினார். அதன்பின் பீமா படத்தில் விக்ரமுடன் நடித்தவர், 2009ல் ரேணிகுண்டா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன் என பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தமிழில் கடந்த 2017ல் சசிகுமார் நாயகனாக நடித்திருந்த 'கொடிவீரன்' என்ற படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

sanusha
இந்தப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது படங்கள் ஏதுமின்றி இருக்கும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் கையில் சீட்டுக்கட்டுடன், தான் புகைப்பிடிக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'எப்படி ஒரு கெட்ட விஷயம் உங்களுக்கு நல்லதாக இருக்க முடியும். நீங்கள் புகைப்பதை கைவிட்டால் நல்லதாக இருக்கும். உங்களை மாற்றிக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.

sanusha
இதைப் பார்த்து ரசிகர்கள் புகைப்பிடித்தல் கேடு, புகைப்பிடித்தல் புற்றுநோயைஉண்டாக்கும் . இதை செய்யாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.