நைட் 1 மணிக்கு எனக்காக இதை செய்யுங்க சார்..! அஜித் மனைவிக்காக இயக்குனர் செய்த வேலை…

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாகவே வலம் வரும் சில பிரபலங்கள் உண்டு. திரைப்படங்களில் நடிக்கும்போது கதாநாயகியாக நடிக்கும் பெண்ணோடு காதல் ஏற்பட்டு அவரையே காதலித்து திருமணம் செய்த பிரபலங்கள் உண்டு.
அஜித்தும் அப்படியான ஒருவர்தான். நடிகை ஷாலினியுடன் அஜித் அமர்களம் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போதுதான் ஷாலினி, அஜித் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார். அஜித்தான் முதலில் ஷாலினியை காதலித்து வந்தார்.
அஜித் ஷாலினி காதல்:
அப்போது எப்படி ஷாலினியிடம் காதலை சொல்வது என யோசித்த அஜித். வேகமாக இயக்குனரிடம் சென்று சார் இந்த பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிங்க இல்லன்னா ஷாலினியை நான் காதலிச்சிடுவேனோன்னு பயமா இருக்கு என கூறியுள்ளார்.
இதை கேட்டு வெட்கப்பட்டுள்ளார் ஷாலினி. இப்படியே மறைமுகமாக இவர்களுக்குள் காதல் சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு நடுவே அஜித்தின் பிறந்தநாளும் வந்துள்ளது. இதை அறிந்த ஷாலினி இயக்குனர் சரணிடம் ஒரு உதவி கேட்டுள்ளார்.

அஜித்திற்காக சில பரிசுகளை வாங்கி அவற்றை சரணிடம் கொடுத்தார் ஷாலினி. பிறகு இந்த பரிசை இரவு 1 மணிக்கு எப்படியாவது அஜித் அறையின் வாசலில் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குனர் சரணும் அதை செய்துள்ளார்.
காலையில் பரிசுகளை பார்த்த அஜித்திற்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் அஜித் தனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என மற்றவர்களிடம் கூறுவாரோ அவையாவும் அந்த பரிசு பொருளில் இருந்தன. அதன் பிறகு ஷாலினியும் தன்னை காதலிப்பதை அஜித் புரிந்துக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒருத்தனும் பணம் தரல!.. விரக்தியில் கண்ணதாசன் எழுதிய பாடல்!.. அட அது செம ஹிட்டு!…