தனுஷின் அந்த படத்தில் பிடிக்காமல் தான் நடித்தேன்... விஜய் பட நடிகை ஓப்பன் டாக்....!
சில நடிகைகள் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தமிழில் குறைவான மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் தளபதி விஜய்யின் தங்கையாகவும் நடித்து பிரபலமானவர் தான் சரண்யா.
தற்போது அரவிந்த் கிருஷ்ணா என்ற பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் குடும்பம் என செட்டிலாகி விட்டதால் இவர் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரண்யா தனது திரை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "என்ன தான் குழந்தை நட்சத்திரமாக நான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். பின்னர் நான் பதினோறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் என்னை நடிக்க கேட்டார்கள். என் குருநாதர் கேட்டு கொண்டதால் என்னால் அதை மறுக்க முடியவில்லை.
அந்த படம் வெளியானதுமே யாரடி நீ மோகினி படத்தின் புரொடெக்ஷன் டீம் என்னிடம் நடிக்க கேட்டார்கள். ஆனால், எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று எவ்வளவோ மறுத்தும் சும்மா ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு வாங்க என்று சொன்னார்கள். ஸ்கிரீன் டெஸ்டில் நிறைய பெண்கள் காத்திருந்தார்கள். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சந்தோஷப்பட்டு போனேன்.
ஆனால், என்னை அந்த படத்தில் நயன்தாரா அக்காவுடன் தங்கச்சி ரோலில் நடிக்க உறுதி செய்து விட்டார்கள். பின் அன்பு கட்டளையால் வேறு வழியில்லாமல் அந்த படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் திருமணம் குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டதால் என்னால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
தற்போது என் குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு என் குடும்பமும் சப்போர்ட்டாக இருக்கிறது. கூடிய விரைவில் பாசிட்டிவான தகவல் சொல்கிறேன்" என கூறியுள்ளார்.