“இதெல்லாம் ஒரு படமா??” தனுஷை கரித்துக்கொட்டிய சரண்யா… ஆனால் டப்பிங்கில் என்ன ஆச்சு தெரியுமா??

by Arun Prasad |   ( Updated:2022-11-08 08:17:42  )
Saranya Ponvannan
X

Saranya Ponvannan

தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். தமிழ் சினிமாவில் ஹீரோவின் அம்மா ரோல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சரண்யாதான். அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் ஒரு யதார்த்த அம்மாவாக சிறப்பாக நடித்து வருகிறார் சரண்யா.

குறிப்பாக “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்தது பலரையும் ரசிக்கவைத்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் சரண்யா பொன்வண்ணன்.

Saranya Ponvannan

Saranya Ponvannan

சரண்யா பொன்வண்ணன் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில் “நாயகன்”, “என் ஜீவன் பாடுது”, “அஞ்சலி” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகுதான் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழின் முக்கிய நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இதனிடையே சரண்யா பொன்வண்ணன் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனுஷிற்கு அம்மாவாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சரண்யாவின் ரோலை நம்மால் மறந்திருக்கவே முடியாது. தனது யதார்த்த நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் மனதில் பதிந்துபோனார் சரண்யா பொன்வண்ணன். குறிப்பாக அத்திரைப்படத்தில் அவர் மறைவுக்கு பின் வரும் பாடலான “அம்மா அம்மா” பாடல் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இதையும் படிங்க: ஷூட்டிங் நின்னு போச்சு!! “என் மேல அப்படி என்ன கோபம்??” சிவகார்த்திகேயனிடம் புலம்பி தள்ளிய இயக்குனர்…

Velaiilla Pattadhari

Velaiilla Pattadhari

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரண்யா பொன்வண்ணன், “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷிடம் கோபமாக நடந்துகொண்ட சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதாவது “விஐபி படத்தில் நடிக்கும்போது ‘இதெல்லாம் ஒரு ரோல்ன்னு என்னைய ஏன் கூப்பிட்டீங்க?’ என தனுஷிடம் சண்டை போட்டேன். அவர் இந்த படத்தின் கதையை என்னுடைய வீட்டிற்கு வந்து சொன்னார். அப்போது ‘இந்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் உண்டு, ஒரு பாடல் கூட உண்டு’ என்றெல்லாம் சொன்னார்.

Velaiilla Pattadhari

Velaiilla Pattadhari

ஆனால் படப்பிடிப்பு நடித்தபோது அந்த அளவிற்கு இல்லை என தோன்றியது. ஆதலால் தனுஷிடம் ‘என்னை இந்த படத்திற்கு கூப்பிட்டிருக்கவே கூடாது’ என சண்டை போட்டேன். அதற்கு அவர் ‘படம் முடிந்த பிறகு பாருங்கள் மேடம்’ என சொன்னார். படம் முடிந்து டப்பிங் பண்ணும்போது படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனேன். எனக்கு இவ்வளவு காட்சிகள் இருக்கிறதா? இதெல்லாம் எப்போது எடுத்தார்கள்? என்று தோன்றியது. ஆனால் படப்பிடிப்பில் இருந்தபோது ‘இதெல்லாம் ஒரு படமா? என்பது போல்தான் நடித்தேன்” என கூறியிருந்தார்.

மேலும் அவர் “அந்த படத்தில் எனக்கு நடித்ததுபோலவே இல்லை. அந்த படப்பிடிப்புத்தளம் எவ்வளவு ஃப்ரீயாக இருந்திருந்தால் இது போன்று எனக்கு தோன்றிருக்கும்?” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story