ஹீரோயினா நடிக்க வைக்கிறேனு கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க... நடிகை வேதனை....!
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் என்றால் அது காதல் படம் தான். ஏனெனில் எதார்த்தமான காதல் எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் காட்சிப்படுத்தி இருந்ததால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் பரத் மற்றும் சந்தியா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். இவர்கள் தவிர நாயகியின் தோழியாக நடிகை சரண்யா நக் நடித்திருப்பார்.
முன்னதாக காதல் கவிதை, நீ வருவாய் என போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சரண்யா நக் காதல் படத்தில் தான் முதல் முறையாக முழுநீள கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் உண்மையில் அந்த படத்தில் சரண்யா தான் நாயகியாக நடிக்க வேண்டியதாம்.
ஆம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரண்யா நாக் கூறியதாவது, "காதல் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நான் தான். என்னை ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்று அழைத்துச் சென்று நடிக்க வைத்தார்கள். பின் ஹீரோயினுக்கு தோழியாக நடிக்க வைத்து ஏமாற்றி விட்டார்கள்" என அதிர்ச்சி அளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.
காதல் படத்திற்கு பின்னர் பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, முயல், ரெட்டை வாலு உள்ளிட்ட படங்களில் நடித்த சரண்யா தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.