Categories: Cinema News Entertainment News latest news television

கூல் சுரேஷையே வம்பிழுப்போம்  – வீடியோவில் கலாய்த்த சீரியல் நடிகை

சின்ன திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் சரண்யா துராடி. இவர் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை, வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

Also Read

பொதுவாக சின்னதிரை நட்சத்திரங்கள் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றி வருவார்கள்.

இவரும் அப்படியாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. தற்சமயம் இவர் நடிகர் கூல் சுரேஷ் வேடத்தில் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒருவேளை நீங்கள் தளபதி ரசிகராக இருந்து உங்கள் க்ரஷ் தல ரசிகராக இருந்தால் என்ன நிகழும் என எழுதியுள்ளார். வீடியோவின் இறுதியில் மாநாடு படம் வெளியான போது கூல் சுரேஷ் பேசிய பிரபலமான வசனம் இடம் பெற்றுள்ளது. சாதரணமாக கூல் சுரேஷ்தான் எல்லோரையும் கலாய்ப்பார். ஆனால் இந்த நடிகை கூல் சுரேஷ்ஷையே கலாய்த்து உள்ளார்.

வீடியோவை காண இங்கே  க்ளிக் செய்யவும்

Published by
Rajkumar