கே.பாலச்சந்தரை பார்த்து இவர் யார்? என்று கேட்ட சரத்பாபு… ஒரு வாரத்தில் தெரிந்தது அதற்கான ரிசல்ட்…

by Arun Prasad |
கே.பாலச்சந்தரை பார்த்து இவர் யார்? என்று கேட்ட சரத்பாபு… ஒரு வாரத்தில் தெரிந்தது அதற்கான ரிசல்ட்…
X

செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, கடந்த 22 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சரத்பாபு தனது இளமை காலங்களில் போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு கிட்ட பார்வை இருந்ததால் தகுதி பெறவில்லை. இதனை தொடர்ந்து பலரும் அவரது உருவத்தை பார்த்து சினிமாவில் நடிக்கலாமே என அறிவுரை கூறினார்களாம். அதனடிப்படையில் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.

Sarath Babu

Sarath Babu

சரத்பாபு தொடக்கத்தில் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய “நிழல் நிஜமாகிறது” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம் நடித்த சரத்பாபு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சரத்பாபு, பாலச்சந்தருக்கு எப்படி அறிமுகமானார் என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.

Singeetham Srinivasa Rao and K balachander

Singeetham Srinivasa Rao and K balachander

ஒரு சினிமா சம்பந்தப்பட்ட விழாவில் சரத்பாபு, தனது நண்பர்களுடன் கத்தி கத்தி பேசி சிரித்துக்கொண்டே இருந்தார். அவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முந்தின வரிசையில் கே.பாலச்சந்தரும், சிங்கீதம் சீனிவாச ராவும் அமர்ந்திருந்தனர். அப்போது சிங்கீதம் சீனிவாச ராவ் சரத்பாபுவை அருகில் அழைத்தார். தனது அருகில் அமர்ந்திருந்த பாலச்சந்தரை காட்டி, “இவர் யார் என்று தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு சரத்பாபு, “எனக்கு இவர் என்றே தெரியாதே” என கூறியிருக்கிறார்.

Nizhal Nijamagiradhu

Nizhal Nijamagiradhu

அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள் பாலச்சந்தர் அலுவலகத்தில் இருந்து சரத்பாபுவுக்கு அழைப்பு வந்தது. உடனே பாலச்சந்தரின் அலுவலகத்திற்கு சென்றார் சரத்பாபு. “நான் அடுத்ததாக நிழல் நிஜமாகிறதுன்னு ஒரு படம் எடுக்கப்போறேன். அந்த படத்துல உனக்கு ஒரு முக்கியமான ரோல் இருக்கு” என்று கூறியிருக்கிறார். அவ்வாறுதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சரத்பாபு.

இதையும் படிங்க: என்னடா சினிமா எடுக்குறீங்க?!.. கடுப்பாகி பாக்கியராஜிடம் கத்திய சிவாஜி…

Next Story