என் பொண்டாட்டியை பாத்து எப்படி நீ அந்த கேள்வியை கேட்ட? சரத்குமார் கிழித்து தொங்க விட்ட மூத்த நடிகர்...

by Akhilan |
என் பொண்டாட்டியை பாத்து எப்படி நீ அந்த கேள்வியை கேட்ட? சரத்குமார் கிழித்து தொங்க விட்ட மூத்த நடிகர்...
X

sarathkumar

நடிகர் சரத்குமார் தன் மனைவி ராதிகாவிடம் மூத்த நடிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் பொது நிகழ்ச்சியில் வெகுண்டெழுந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

சமாஜம்லோ ஸ்தீரி படத்தின் மூலம் சினிமா உலகில் எண்ட்ரியானவர் நடிகர் சரத்குமார். முதல் படத்திலே வில்லனாக தான் வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் அப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சரத்குமாருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

Sarathkumar

கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக வாய்ப்பு வந்தது. இந்த படத்தினையும் சரத்குமாரே தயாரித்தார். அப்படத்தில் கார்த்திக் மற்றும் அம்பிகா இணைந்து நடித்திருந்தனர். அடுத்த விஜயகாந்தின் ஆஸ்தான மேக்கப் மேன் ராஜூ மூலம் விஜயகாந்தின் நட்பு கிடைத்தது.

அவர் தான் தன்னுடைய புலன் விசாரணை படத்தில் சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தார். அந்த படத்திற்காக சிறந்த வில்லன் விருதையும் சரத் வாங்கினார். அதை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்களே கிடைத்தது.

சரத்குமார்

Sarathkumar -Radhika

செந்தில்நாதன் இயக்கத்தில் உருவான பாலைவன பறவைகள் படத்தில் தான் முதன்முதலில் நாயகனாக நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தது. அதனால் சரத்குமாரை ரசிகர்கள் சூப்ரீம் ஸ்டார் என அழைத்தனர்.

தனது சினிமா எண்ட்ரிக்கு முன்னரே சாயா தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பில் விவகாரத்து பெற்றனர். அதை தொடர்ந்து 2001ல் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

Sarathkumar

இந்நிலையில், ராதிகாவிடம் சிவக்குமார் கேட்ட கேள்வியால் சரத்குமார் அவரை கடுமையாக சாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உன் சொத்தை விற்று சரத்குமார் சாப்பிட்டு விட்டாரா என்பது தான். இதில் காண்டாகி விட்டாராம் சரத்குமார்.

அந்த வீடியோவில், நீங்க ஏன் என் பொண்டாட்டியை அந்த கேள்வியை கேட்டீர்கள். என்னிடம் கேட்க வேண்டியது தானே. நான் ஏன் என் மனைவி சொத்தை விற்க போகிறேன். அப்படி ஆண்மை இல்லாதவனா நான். அண்ணன் என்ற மரியாதைக்கு தான் விட்டேன். இல்லை நேரில் வந்து கேட்டிருப்பேன்.

நான் செத்தால் கூட என் குடும்பம் நடுரோட்டில் நிற்காது. சொத்தை வைத்து வாழ வைத்து விட்டு தான் போவேன். உங்களுக்கு இதெல்லாம் தேவையா என கோபத்தில் அவர் கத்திய வீடியோ தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.

Next Story