ஆம்பளனா உழைச்சு சாப்பிடனும்.. சூதாட்டம் குறித்து சரத்குமாரின் பேச்சுக்கு விஷால் பதிலடி!..
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பு பொருளாக பேசப்படுபவை சூதாட்டம் குறித்து எழும் பிரச்சினைகள் தான். அதுவும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை பிராண்ட் அம்பாஸடராக வைத்து சூதாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் பாலிவுட்டில் ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் தோனி என்ற வரிசையில் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் பிராண்ட் அம்பாஸ்டராக நடித்துக் கொடுத்தார். அதன் மூலம் ஏராளமான உயிர்கள் சூதாட்டம் விளையாட்டில் சிக்கி பல பணங்களை இழந்து மரணத்தையும் தழுவினார்கள்.
இதையும் படிங்க : வணங்கான் படம் டிராப் ஆனது எதுனால தெரியுமா?? சீக்ரெட்டை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..
இதை பற்றி சரத்குமாரிடம் கேட்டபோது ஒருத்தன் இறந்தான் என்று கேள்விப்பட்டதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆள் அனுப்பி விசாரிக்க சொன்னேன். குடும்பத்தகராறு காரணமாக அவர் இறந்திருக்கிறான் என்று சொன்னார்கள். உடனே சூதாட்டத்தினால் தான் கடன் சுமை ஏறி தற்கொலை பண்ணிக் கொண்டான் என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது என்று சரத்குமார் கூறினார்.
மேலும் கூறும்போது ரம்மி விளையாட வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி அறிவு வேண்டும் என்றும் அது ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு என்றும் கூறியதோடு கிரிக்கெட்டில் இருந்து கால்பந்து வரை அனைத்தும் சூதாட்டத்தில் தான் சுழன்று கொண்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார். மேலும் ஓட்டு போடுங்கள் என்று சொல்வதை கேட்காத மக்கள் ரம்மி விளையாடுங்கள் என்று சரத்குமார் சொன்னால் கேட்பார்களா? என்றும் நக்கலாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க : இவர்தான் ரியல் சர்தார்… உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்… வரலாற்றில் மறைந்து போன உளவாளியின் சோகக் கதை…
இதை பற்றி நடிகர் விஷாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‘என்னை பொருத்தவரைக்கும் சூதாட்டம் என்பது ஒரு தடைசெய்யப்படவேண்டிய விஷயம். என்னையும் கேட்டார்கள். நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். சரத்குமார் பிராண்ட் அம்பாஸ்டராக இருக்கிறார் என்றால் அது அவர் தனிப்பட்ட விஷயம். பணம் கொடுக்கிறார்கள் அவர் நடிக்கிறார்.
மேலும் என்னைக் கேட்டால் ஆம்பளனா இரண்டு கைகளும் இருக்கிற மனிதன் சொந்த உழைப்பால் சம்பாதித்து அதன் மூலம் வரும் வருவாயில் கொஞ்சமாவது மற்றவருக்கு கொடுத்து வாழ வேண்டும். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதன் மூலம் நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று. அதனால் நானும் நடித்து இன்னும் சில பேரின் தற்கொலைக்கு நான் காரணமாக கூடாது என்ற காரணத்தினால் தான் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்’ என்று மிகவும் பெருந்தன்மையாக கூறினார் விஷால்.