இரண்டு திருமணம் செய்தும் தனிமையில் வாழ்ந்த சரத்பாபு.. அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?..

திரையுலகினருக்கு நேற்று அதிர்ச்சியான செய்தியாக வந்தது நடிகர் சரத்பாபுவின் மரணம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரத்பாபு தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாலச்சந்தர் இயக்கிய ‘ஒரு நிழல் நிஜமாகிறது’ படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

மிகவும் சாஃப்ட்டாக பேசுபவர். கத்தி பேசமாட்டார். சண்டை காட்சிகளில் நடிக்க மாட்டார். பணக்கார இளைஞன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதால் இவருக்கு அதுபோன்ற நிறைய வாய்ப்புகள் வந்தது. மகேந்திரன் இயக்கிய மெட்டி, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

sarath

ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் நடித்தார். வயதானபின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு வயது 70 ஆகும்.

sarath

திரையுலகில் பெண்களிடம் பழகுவதில் ஜெண்டில்மேனாக வலம் வந்தாலும் சரத்பாபுவுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை தரவில்லை.1971ம் வருடம் நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்து கொண்டார். கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவி்ட்டனர். அதன்பின் எம்.என்.நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த அவர்கள் அதன்பின் விவாகரத்து பெற்றனர். அதன்பின் கடைசிவரை சரத்பாபு தனியாகவே வாழ்ந்து தற்போது மரணமடைந்துள்ளார்.

 

Related Articles

Next Story