இயக்குனரால் கடுப்பான சரத்குமார்.... வேட்டியை கழட்டி வீசிய சம்பவம்...!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரத்குமார். இப்போது தான் நடிகர்கள் சிக்ஸ் பேக் ஜிம் வொர்க் அவுட் என உள்ளார்கள். ஆனால் அந்த காலத்திலேயே தனது உடலை கட்டுமஸ்தாக வைத்து பெண்களை கவர்ந்தவர் தான் நடிகர் சரத்குமார்.
தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முன்பே சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது சூர்யவம்சம் தான். இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் ஒன்றை சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

sarath kumar-radhika
அதன்படி அவர் கூறியதாவது, "நான் சூர்ய வம்சம் படத்திற்காக வேட்டி சட்டை எல்லாம் அணிந்து ரெடியாகிவிட்டேன். ஆனால் ஷூட் தாமதமாகும் என கூறியதால் ஒரு ஓரமாக அமர்ந்து போன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ராதிகா என்னை சரத் என அழைக்க எனக்கு இன்னும் ஷாட் ரெடியாகவில்லை. நான் வருகிறேன் போ என்றேன்.
அதன் பின்னர் போனை கட் செய்துவிட்டு வரும்பொழுது விக்ரமனும் ராதிகாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் விக்ரமனுக்கு பின்னால் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. அப்போது அவர் ராதிகாவிடம், இந்த ஹீரோ எப்போ பார்த்தாலும் கேர்ள் பிரண்ட்ஸோட பேசிட்டே இருக்காரு. அப்படி இப்படினு என்னை திட்டிக்கொண்டிருந்தார்.

sarath kumar
அந்த சமயத்தில் எனக்கு ஷாட் ரெடியானது. உச்சக்கட்ட கோபத்தில் இருந்த என்னிடம் வந்து டயலாக் இதுதான் என ஒவ்வொருவரும் மாறி மாறி சொன்னதும் கோபத்தில் வேட்டியை கழட்டி போட்டுவிட்டு சென்றுவிட்டேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் ஏன் வேட்டியை கழட்டி வீசினேன்னு எனக்கு தெரியலை. அதன் பிறகு விக்ரமன் சமாதானம் செய்து நடிக்க வைத்தார்" என கூறியுள்ளார். மனுஷன் பயங்கர கோவக்காரரு தான் போல....