இதுவரை இல்லாத பிரம்மாண்டம்..!..சரத்குமார் ஏற்று நடிக்க விரும்பும் கதாபாத்திரம் யாருன்னு தெரியுமா?
தமிழ்சினிமாவில் 80, 90களில் கமல், ரஜினி காலகட்டத்தில் தனியாக ட்ராவல் செய்து தனக்கென ஒரு பாணியைக் கொண்டு அழுத்தமாகத் தடம் பதித்தவர் சரத்குமார். தமிழ்சினிமாவில் அதிகமாக டபுள் ஆக்ட் டாக நடித்த ஹீரோ சரத்குமார்.
இவர் நடிப்பில் சாமுண்டி, நாட்டாமை, சூர்யவம்சம் படங்களை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இவரது கட்டுடல் தான் இவருக்கு அழகு. இன்னும் இதைக் கடைபிடித்து வருகிறார் என்று சொன்னால் மிகையில்லை. தனது கடந்த கால அனுபவங்களில் ஒரு சிலவற்றை பகிர்கிறார் பாருங்கள்.
ஒரு நடிகர் எதைக்கொடுத்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். கதையை வெற்றி பெறச்செய்ய வேண்டும். சூர்யவம்சம், நட்புக்காக, நாட்டாமை இதையும் தாண்டி வித்தியாசமான திரைக்கதைகள் இன்னும் வரவில்லை. அப்படி வந்தால் நடிக்க ஆசைப்படுகிறேன். இன்னும் வரும் என்கிற நம்பிக்கை உள்ளது. அப்படி வந்தால் நடிக்க விரும்புகிறேன்.
எனது ட்ரீம் ரோல் எது என்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நான் ரொம்ப விரும்புகின்ற தலைவர். அவரைப்போல இயற்கையா நடிக்கணும்னு ஆசை. அதற்கான காலமும், நேரமும் கிடைக்குதா என்று தெரியவில்லை. ரொம்ப வருஷமா நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
இது ஒரு மிகப்பிரம்மாண்டமான படமாக ரொம்ப நேச்சுரலா இருக்கணும். இது ஒரு பீரியட் பிலிம். அவரது இறுதியாத்திரை செல்லும்போது, இறுதிப்பயணம் செல்லும்போது, சிங்கப்பூர் செல்லும்போது, ஜப்பான், சபரின், ஜெர்மனி இதையெல்லாம் சொல்லணும்னா உண்மையா நேச்சுரலா, பிரம்மாண்டமா இருக்கணும். அதுக்கான தயாரிப்பாளர் கிடைச்சா செய்யலாம்.
2001ல் சரத்குமாருடன் நடிகை ராதிகாவிற்கு திருமணம் நடைபெற்றது. இவரது சினிமா உலகில் இன்று வரை நடக்காத ஒரு விஷயத்தைப் பற்றி அந்தத் தருணத்தைப் பற்றி எவ்வளவு நெகிழ்ச்சியாக சொல்கிறார் பாருங்கள்.
ராதிகாவிடம் பாலச்சந்தரைப் பற்றி கேட்கும்போது, அவர் இயக்கத்தில நடிக்கணும்னு ரொம்ப ஆசை. எல்லா நடிகர்களுடனும் நடித்து விட்டேன். எல்லா டைரக்டர்களுடனும் ஒர்க் பண்ணிட்டேன். சினிமாவை மாற்றிய இயக்குனர்.
அவரிடம் ஒருமுறை என் விருப்பத்தை சொன்னேன். உன்னை மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு ரோல் கொடுத்தா அப்படி பிரமாதமாக இருக்கணும். அது இன்னும் மைன்டுக்கு வரலன்னு சொன்னார். இன்னொரு முறை சந்திக்கும்போது சார்...என்ன சார்...இது..அட்லீஸ்ட் டிவி சீரியல் கூட நடிக்கலாம்னு சொன்னேன். அதுக்குள்ள அவர் இறந்துட்டாரு என நெகிழ்கிறார்.
கிழக்கேப் போகும் ரெயில் படத்தில் பாஞ்சாலியாக அறிமுகமானவர் ராதிகா. எல்லா ரோல்சும் டிபரண்டான ரோல்ஸ். இவங்க தான் எனக்கு பிடிச்சவங்க...அவங்க தான் எனக்கு பிடிச்சவங்கன்னு கிடையாது. எல்லாருமே எனக்கு பிரண்ட்ஸ்.
ரசிகர்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!