ஒரு காட்சிக்காக உயிரையே பணயம் வைத்த சரத்குமார்…ஷாக் ஆகிப்போன இயக்குனர்…

by Arun Prasad |   ( Updated:2022-09-30 02:33:41  )
ஒரு காட்சிக்காக உயிரையே பணயம் வைத்த சரத்குமார்…ஷாக் ஆகிப்போன இயக்குனர்…
X

1997 ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி, ப்ரியா ராமன், மணிவண்ணன், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சூர்ய வம்சம்”. இத்திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் சரத்குமாரின் கேரியரிலேயே ஒரு திருப்புமுனை நிறைந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் இப்போதும் ரசிக்கப்படும் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக இருக்கிறது. குறிப்பாக ஒரே பாடலில் முன்னேறும் காட்சிகள் எல்லாம் இப்போதும் பிரபலமானவை.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை குறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது சரத்குமார் குறித்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது ஒரு காட்சியில் சரத்குமார் சாப்பிடுவது போன்ற ஒரு காட்சி இருந்திருக்கிறது. அக்காட்சியை இரவில் எடுப்பதாக முடிவெடுத்திருக்கின்றனர். ஆதலால் இரவு ஒரு நல்ல ஹோட்டலில் சரத்குமாருக்கு அரிசி சாப்பாடு தயார் செய்து வாங்கிவர வேண்டும் என இயக்குனர் புரொடக்சன் யூனிட்டிடம் கூறியிருக்கிறார்.

இரவு சாப்பாடும் ரெடி ஆகியிருக்கிறது. அக்காட்சி எடுக்க தொடங்கியபோது சரத்குமார் அந்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறார். இயக்குனர் கட் சொன்னவுடன் சரத்குமார் ஓடிச்சென்று சாப்பிட்ட சாப்பாட்டை துப்பியிருக்கிறார்.

இதனை பார்த்த இயக்குனர் சரத்குமாரிடம் “உங்களுக்கு அரிசி சோறு பிடிக்காதா?” என கேட்டிருக்கிறார். அதற்கு சரத்குமார் “இந்த சாப்பாடு மதியமே வாங்கியது போல, கெட்டுப்போய் உள்ளது. நான் புரொடக்சன் யூனிட்டிடம் கேட்டேன். அவர்கள் கடைசி நிமிடத்தில் தயார் செய்யமுடியவில்லை. இதனை இயக்குனரிடம் சொல்லிவிடாதீர்கள் என சொன்னார்கள். சரி என்று சொல்லிதான் இதனை சாப்பிடுவது போல் நடித்தேன்” என கூறியிருக்கிறார்.

அதாவது இது கெட்டுப்போன சாப்பாடுதான் என்று தெரிந்துமே அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக சாப்பிட்ட சாப்பாட்டை தொண்டை வரை அடக்கிவைத்து, கட் சொன்னவுடன் போய் துப்பியிருக்கிறார். இதனை கேட்டதும் இயக்குனர் ஷாக் ஆகிவிட்டாராம். “ஒரு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக இப்படி ரிஸ்க் எடுக்கிறாரே” என விக்ரமன் நெகிழ்ந்துபோனாராம்.

Next Story